சென்னையில் மாமியார் கொலை மருமகனுக்கு வலைவீச்சு
வண்டலூர் அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது
வண்டலூர் அருகே #இந்திரா நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயதுவண்டலூர் அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது39). கொத்தனார் வேலை செய்து வருகிறார் இவருக்கு சுஷ்மிதா (வயது 24) என்ற மனைவி உள்ளார்.இவா் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவி சுஷ்மிதாவிடம் தகராறு செய்து அடித்து துன்புறுத்தவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்றும் வழக்கம்போல் அளவுக்கு அதிகமாக மது குடிவிட்டு சதீஷ் தகராறில் ஈடுபட்டதால் பொறுமை இழந்த சுஷ்மிதா, அதே பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்றிரவு மீண்டும் குடித்துவிட்டு மனைவியை அழைத்துவருவதற்காக மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், மாமியார் ஜெய்சித்ரா, தனது மகளை உன்னுடன் அனுப்பி வைக்க முடியாது என்றும் தினந்தோறும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்யக்கூடாது என அறவுரைகள் கூறியதோடு தனது மகளை சதீஷ்டன் அனுப்பிவைக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சதீஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமியாரின் கழுத்தை அறுத்தும், வயிற்றில் குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
இது குறித்த புகாரின்பேரில், ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரேதத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலையாளி சதீஷை வலைவீசி தேடிவருகின்றனர்.



