கால்வாயில் குளிக்க சென்ற மூவா் அடுத்தடுத்து மாயம் தீவிர தேடுதலில் தீயணைப்பு துறையினா்.

vellam - 2026

கால்வாயில் குளிக்க சென்ற மூவா் அடுத்தடுத்து மாயம் தீவிர தேடுதலில் தீயணைப்பு துறையினா்…!

வாளவாடி கால்வாயில் குளிக்கச் சென்ற மூவா் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பரிதாபம் உடலைகளை தேடும் பணியில் தீயணைப்பு துறையினா். தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

உடுமலையை அடுத்த வாளவாடியை சேர்ந்தவர் பகவதி (வயது 50). இவருடைய மகன் சிவனேஷ் என்ற நிர்மல்(23). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.

சிவனேஷ் வார விடுமுறை நாட்களுக்கு தனது வீட்டுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு வழக்கம்போல் வாளவாடியில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

மறுநாள்(12-ந்தேதி) நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு வாளவாடிக்கு அருகில் உள்ள பி.ஏ.பி. பிரதான கால்வாய்க்கு குளிப்பதற்காக சென்றதாக தெரிகிறது. சிவனேஷ் நண்பர்களுடன் வாய்க்காலில் இறங்கி குளித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

வாய்க்காலில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவரால் மேலே வரமுடியவில்லை. இதையடுத்து உடன் சென்ற நண்பர்கள் சிவனேஷின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

அதைத்தொடர்ந்து அவரது பெற்றோரும், உறவினர்களும் வாய்க்காலின் பல இடங்களில் தேடினார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடிய வில்லை. இதையடுத்து சிவனேஷின் தந்தை பகவதி தளி போலீசில் புகார் செய்தார்.

அதைத் தொடர்ந்து தளி போலீசார் வாய்க்காலில் மூழ்கி காணாமல் போன சிவனேஷை நேற்று முழுவதும் தீவிரமாக தேடினார்கள். ஆனால் சிவனேஷ் கிடைக்கவில்லை. இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மீண்டும் இன்று(செவ்வாய்க்கிழமை) காலையில் தேடும் பணி நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதேபோல் பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் சுபாஷ்(45). இவரது மனைவி இந்திராணி(38). இவர்களுக்கு அருண்குமார்(18) மற்றும் அரவிந்தன்(21) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

சுபாஷ் பாப்பம்பட்டியில் உணவகம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். அருண் குமார் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு தற்போது தனியார் பனியன் கம்பெனியில் வேலைக்கு சென்று வந்துள்ளான்.

இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பல்லடத்தில் இருந்து பொங்கலூருக்கு அருண்குமார் வந்துள்ளார். அனைவரும் பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்துக்கொண்டிருந்தனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

அப்போது அருண்குமார் எதிர்பாராத விதமாக தண்ணீரின் உள்ளே விழுந்துவிட்டான். நீச்சல் தெரியாததால் மேலே வர முடியாமல் தத்தளித்துள்ளான். அப்போது அருகில் இருந்தவர்கள் அருண் குமாரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் தண்ணீரின் வேகத்தில் அருண்குமார் அடித்துச்செல்லப்பட்டான்.

உடன் வந்தவர்கள் அருண்குமாரின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசார் மற்றும் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் வாய்க்கால் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் மாலை வரை அருண்குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தீயணைப்பு துறையினரும், அருணின் உறவினர்களும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதேபோல் திருப்பூரை அடுத்த வீரபாண்டியை சேர்ந்த பிரகாஷ் (30). பனியன் நிறுவனத்தில் தினக்கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது 3 வயது மகன் சஞ்சயை ஆண்டிப்பாளையம் பி.ஏ.பி.வாய்க்காலில் குளிக்க அழைத்துச்சென்றார்.

அப்போது இருவரும் தண்ணீரில் இறங்கி குளித்தபோது வாய்க்காலில் தண்ணீர் வேகமாக வந்ததால் சிறுவன் சஞ்சய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டான்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவன் சஞ்சயை தேடி வருகிறார்கள்.

ஒரே நாளில் குளிக்க சென்ற மூவா் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories