சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களுக்கு வரும் பொதுமக்களை கவரும் வகையில் அங்கு வழங்கப்பட்டு வரும் உணவு வகைகளில் மாற்றம் செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதா ஆட்சியில் அவர் சிந்தயைில் உதித்து கடந்த 2013ஆம் அண்டு இந்த அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன.
அவரது மறைவுக்குப் பின் அம்மா உணவகங்களில் உணவுகளின் தரம் குறைந்து, விற்பனையும் குறைந்திருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனா்
.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி கூறியதாவது் : சென்னை மாநகராட்சியில் மொத்தம் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் காலை வேளையில் ஒரு இட்லி ரூ.1, பொங்கல் ரூ.5 என்ற விலையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பிற்பகலில் தயிர்சாதம் ரூ.3, சாம்பார் சாதம் மற்றும் கலவை சாதம் உள்ளிட்டவைகள் தலா ரூ.5 விலையிலும் இரவில் 2 சப்பாத்தி மற்றம் பருப்பு சாம்பார் ரூ.3 விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் தினமும் சுமார் 3லட்சம் இட்லிகள் வரை விற்பனையாகின்றன. நாளொன்றுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.
உயர்தர உணவகத்தில் நாம் 5 இட்லி வாங்கினால் அதில் முதல் இட்லியின் முதல் துண்டை உண்ணும்போது இருக்கும் ஆர்வம், கடைசி இட்லியின் கடைசித்துண்டை உண்ணும்போது இருப்பதில்லை ஆனால் அந்த 5 இட்லியும் தரமானவைதான்.
அதுபோல கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மா உணவகங்களில் ஒரே வகையான தரமான உணவுகளே வழங்கப்பட்டு வருகிறது.
அதனால் அதை தொடா்ந்து உண்ணும் மக்களுக்கு அந்த உணவு மீதான ஆர்வம் குறைகிறது. அதன் விளைவாக விற்பனை குறைகிறது. உணவின் தரத்தில் எந்த குறைபாடு இல்லை.
அம்மா உணவகத்தக்காக ஆண்டுதோறும் ரூ.140 கோடிவரை செலவிடுகிறோம் எனவே வரும் காலத்தில் நிதிச்சுமை ஏற்படாத வகையில் பொதுமக்களை கவரும் விதமாக உணவு வகைகளில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறோம்
இது தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்படும் சிறப்பு குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்ய திட்டமிட்டுருக்கிறோம்
இவ்வாறு அவர் கூறினார்.





