ஏசி தீப்பிடித்ததில்; ஒரே குடும்பத்தை சோ்ந்த மூவர் பலியான சோகம்..!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சென்னை

fireaccident kanchipuram - 2026

திண்டிவனம் அருகே ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் உடல் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள காவேரிப்பாக்கத்தில் பகுதியில் வசித்து வருபவர் ராஜி. லதா தம்பதியினர் இவர்களுக்கு கவுதம் என்ற மகனும் உள்ளார். ராஜீ அதே பகுதியில் வெல்டிங் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு அவர்களது வீட்டின் ஒரு அறையில் பொருத்தப்பட்டிருந்த ஏசி இந்திரத்தில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ராஜி, மனைவி லதா, மகன் கவுதம் ஆகிய 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தூக்கத்தில் இருந்ததால் மின்கசிவு ஏற்பட்டு ஏசியில் தீவிபத்து ஏற்பட்டது தெரியாமல் தூக்கத்திலேயே 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.