பகலில் சமையல் வேலை இரவில் திருட்டு; மாற்றுத்திறனாளி இளைஞர் கைது…!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சென்னை

theruttu - 2026பகலில் சமையல் வேலை செய்துவிட்டு இரவில் திருட்டு தொழிலில் ஈடுபட்ட வந்த பிரபல கொள்ளையன் அண்ணாநகரில் போலீஸாரிடம் பிடிபட்டான்…!

சென்னை அண்ணா நகர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டு அடுத்தடுத்து பணம் திருடப்பட்டு வந்தது

கொள்ளையனை பிடிக்க அண்ணாநகர் காவல் மாவட்ட துணை ஆணையர் சுதாகர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கபட்டது. தனிப்படை பேலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினா்.

முதல் கட்டமாக அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன அதில் அண்ணா நகர் மெட்ரே ரயில் நிலைய சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சந்தேகத்துக்குரிய வகையில் இளைஞர் ஒருவர் அப்பகுதியில் நடமாடுவது தெரிய வந்தது.

அவரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.
இதில் பிடிபட்டவர் அரியலுாரை சேர்ந்த இளைஞர் சிவா என்பதும், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதும் தெரியவந்தது.

பகலில் சமையல் வேலை செய்யும் இவர் அந்த பகுதிகளில் ஆள் இல்லாத வீடுகள் மற்றும் கடைகளை நோட்டமி்ட்டு இரவில் திருட்டில் ஈடுபட்டதாகவும் விசாரணைியல் தெரியவந்தது.

இவர் மீது பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.