வெடிகுண்டு மிரட்டல்களால் தலைமைச் செயலகத்தில் பரபரப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

சென்னை தலைமை செயலகத்துக்கு மர்ம நபர்கள் திடீர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

தேர்தல் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், வந்த கடிதத்தால் பதற்றம் ஏற்பட்டது. இதை அடுத்து, தலைமைச் செயலகத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப் பட்டனர். மேலும்,  மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகக் கூறப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வெடிகுண்டு வெடிக்கும் என மொட்டைக் கடிதம் தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.