December 6, 2025, 3:58 AM
24.9 C
Chennai

கலக்கத்தில் கழகம்! பாகிஸ்தான் ஆதரவு அவப்பெயரால் ஆர்ப்பாட்டத்தை மாற்றிய பின்னணி!

delhi protest - 2025முதலில் #காஷ்மீரில் 370 ரத்தை எதிர்த்து தில்லியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு என்ன பயமோ? அல்லது #பாகிஸ்தான்_ரேடியோ டிவிட்டர் நேரலை பிரச்சார பயமோ? அல்லது ப.சிதம்பரத்தின் நிலையை கண்ட பயமோ?

கடைசியில் காஷ்மீர் வீட்டுக் காவலில் உள்ளவர்களை விடுவிக்கணும், அமைதி திரும்ப என்று தலைப்பை மாற்றி விட்டனர். திமுக தலைவர் #ஸ்டாலினும், தமிழக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் #திருமா , #வைகோ கலந்து கொள்ளவில்லை.. வரப் போகிற 2021 #சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் சரிந்த #இஸ்லாமிய வாக்கு வங்கியை திமுக பலப்படுத்த திட்டம் தவிர இதில் வேறு ஒன்றுமில்லை.. என்கிறார்கள் திமுக., தலைமையில் இன்று தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தை! dmkprotest delhi - 2025

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை எதிர்த்து திமுக சார்பில் இன்று தில்லியில் போராட்டம் நடைபெற்றது. காஷ்மீருக்கு போடப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, மாநிலத்தை இரண்டாகப் பிரித்தும் மசோதாக்களை நிறைவேற்றியது. இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும் பாஜகவுக்கு பெரும்பான்மை
இருந்ததால் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன்.

இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று திமுக தலைமையில் தில்லியில் அனைத்துக் கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்துக்கு முக.ஸ்டாலின் செல்லவில்லை. கார்த்திக் சிதம்பரம், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறம் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இது குறித்து சென்னையில் அளித்த பேட்டியில் திமுக தலைவர் ஸ்டாலின், ‘’இன்று தில்லியில் திமுக., தலைமையில் அனைத்து எதிர்க்
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கண்டன
ஆர்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்பாட்டத்தின் நோக்கம், வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரசியல் தலைவர்கள், தொண்டர்களை விடுதலை செய்ய வேண்டும். அங்கே நிறுத்தப்பட்டு இருக்கும் தொலைதொடர்பு துண்டிப்புகளை சரிசெய்ய வேண்டும்,
மக்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்று கூறினார்.

இந்த ஆர்பாட்டத்தில் திமுகவின் அழைப்பை ஏற்று காங்கிரஸ் கட்சி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ்வாடி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய மாநாட்டு கட்சி, மதிமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

stalin meme1 - 2025முன்னதாக, காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரித்துள்ள நிலையில், திமுக மட்டும் அதனை எதிர்த்து தில்லியில் போராட்டம் அறிவித்தது.

திமுக.,வின் இந்த நிலைப்பாட்டை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான், ஒரு டிவிட்டர் பதிவில், ஸ்டாலினுக்கு நன்றி சொன்னது. இதை எதிர்பார்க்காத திமுக அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

காஷ்மீரில் 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தில்லி ஜந்தர் மந்தரில் இன்று திமுக., ஆர்ப்பாட்டம் நடத்தியது. 370 சட்டப்பிரிவை இந்தியா ரத்து செய்ததற்கு உலக நாடுகள் பலவும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் அதிர்ச்சியில் நொந்து போன பாகிஸ்தான், மோடி அரசுக்கு எதிராக என்ன விஷயம் கிடைக்கும் என காத்துக் கொண்டிருந்தது. அதற்கு, திமுக.,வின் ஆர்ப்பாட்ட அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. அதனையே தன் பிரசாரத்துக்கும் பயன்படுத்திக் கொண்டது.

ரேடியோ பாகிஸ்தான், “இந்தியாவில் 2019 ம் ஆண்டு தேர்தலில் 3வது பெரிய கட்சியாக வெற்றி பெற்ற திமுக, மோடி அரசின் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவுக்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளது” என குறிப்பிட்டு டிவிட்டர் பதிவு செய்தது. இதையே பல ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன.

stalin - 2025ஆனால், இது சமூக வலைத்தளங்களில் பெரிதாகப் பரவியது. பாகிஸ்தான் ஆதரவுடன் திமுக., இயங்குவதாகக் குறிப்பிட்டனர் பலரும்! இதனை சிறிதும் எதிர்பார்க்காத திமுக தலைமை கலக்கத்தில் ஆழ்ந்தது. பாகிஸ்தான் ஆதரவுக் கட்சி திமுக., என்ற தோற்றத்தை இது ஏற்படுத்தி உள்ளது. எனவே தான், இதை சமாளிப்பதற்காக காஷ்மீரில் 370 பிரிவு நீக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் என கூறி வந்த திமுக, தற்போது காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மட்டுமே போராட்டம் நடத்துகிறோம் என மாற்றிப் பேசியது.

இந்நிலையில் திமுக.,வின் இந்த நிலைப்பாடும், ஸ்டாலின், திருமா வளவன் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாததும்  பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories