சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்; சென்னை காவல் ஆணையர்.

Published:

 

AKV - 2026

நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தோ்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இந்தியா முழுமைக்கும் நடைபெற உள்ள நிலையில் தமிழக தலைநகர் சென்னையில் நாளை மூன்று இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இந்நிலையில் வடசென்னை, நாடாளுமன்ற தொகுதி மற்றும் பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளுக்கும் ராணி மேரி கல்லுாரியில் வைத்து வாக்குகள் எண்ணும் பணி நடைபெற இருக்கிறது.

அதனை தொடர்ந்து அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு செய்தார்.

பின்னர் நடந்த  பத்திரிக்கையாளா்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, நாடாளுமன்ற, மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி நாளை நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள காவல்துறை தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடக்கவிருக்கும் 3 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் சுமார் 5 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.

Related articles

Recent articles

spot_img