சினிமா பாணியில் விரட்டித் துரத்தி… வழிப்பறிக் கொள்ளையனை சுட்ட போலீஸ்!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

attibele policestation - 2026 ஓசூர்: தமிழ்நாடு கர்நாடக எல்லை பகுதியான அத்திப்பள்ளியில் போலீஸாரை தாக்கிவிட்டு, தப்பி ஒடிய வழிப்பறிக் கொள்ளையன் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

ஓசூர் அருகே கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் ஒசூர் TVS சாலையில் ஒரு இளைஞன் வழிப்பறி செய்வதாக அத்திப்பள்ளியில் போலீஸாருக்கு அவ்வழியே சென்றவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து உடனடியாக போலீஸ் அதிகாரிகள் அங்கே சென்று வழிப்பறிக் கொள்ளையனை பிடிக்க முயற்சி செய்த போது போலீசை தாக்கிவிட்டு, அவன் தப்பி ஓட முயற்சி செய்துள்ளான்.

அப்போது போலீசாரின் எச்சரிக்கையை மீறி ஓட முயன்ற போது போலீசார் இரண்டு முறை வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்! இதையும் மீறி கொள்ளையன் தப்ப முயன்றதால் கொள்ளையன் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் அவன் கால் பகுதியில் தூப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.

attipalleepolicestation - 2026தொடர்ந்து அவன் கீழே விழுந்தான். அவனைப் பிடித்து விசாரித்த போது அவன் பெங்களுர் பசவேஹவர் நகர் பகுதியை சேர்ந்த செஷாங்க் (வயது 23) என்று தெரிய வந்தது.

இதையடுத்து அவனை மீட்டு அத்திப்பள்ளி மருத்துவமனையில் சிகிழ்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும் கொள்ளையனால் தாக்கப் பட்ட போலீஸ் அதிகாரியும் சிகிச்சை பெற்று வருகிறார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.