கருணாநிதிக்கு நெருக்கமான ஆண்டிமடம் சிவசுப்ரமணியன் காலமானார்! திமுக.,வினர் அஞ்சலி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் திருச்சி லைஃப் ஸ்டைல்

sivasubramanian dmk - 2026கருணாநிதிக்கு நெருக்கமானவராக அறியப் பட்ட திமுக.,வைச் சேர்ந்த மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசுப்பிரமணியன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு மிக நெருக்கமானவராக இருந்த ஆண்டிமடம் சிவசுப்பிரமணியன் 1998 முதல் 2004 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும்,1989 ஆண்டு ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராகவும், 1971 முதல் 1976 ஆண்டிலும் 1986 முதல் 1990, ஆண்டிலும் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும் பணியாற்றியவர்.

தற்போது திமுக.,வில் சட்ட திட்ட திருத்தக் குழு உறுப்பினராக இருந்தவர். இவரது உடல் அரியலூரில் உள்ள அவரது சொந்த இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவரது மறைவு திமுக.,வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடலுக்கு திமுக.,வினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.