குற்றாலம் சிற்றாறு தூய்மைப்படுத்தும் பணி… ஆட்சியர் ஆய்வு!

Published:

IMG 20190616 WA0009 - 2026

குற்றாலத்தில் உருவாகி தாமிரபரணி ஆற்றில் சங்கமிக்கும் புனித நதியான சிற்றாற்றை புனரமைத்து மேம்படுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு செய்தார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நெல்லை மாவட்டத்தில் உள்ள இயற்கை வளங்களை மேம்படுத்தி, நீர் நிலைகளுக்கு புத்துயிர் அளித்து, பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதனால் அவர் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு அவார்டுகளை பெற்று வருவதுடன் பொது மக்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்து, தூர்வாறி மேம்படுத்தியதால் கடந்த ஆண்டு மத்திய அரசின் நீர்வளத்துறை, நதிகள் மேம்பாடு, கங்கையை தூய்மை படுத்துதல் அமைச்சர் நிதின் கட்கரியிடம் இருந்து பரிசு பெற்றார்.

அது போல நெல்லை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழித்ததற்கு தமிழக அரசு மாசு கட்டு பாட்டு வாரியத்தின் சிறப்பு பரிசினை தமிழக முதல்வரிடம் இருந்து பெற்றார்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

கடந்த ஆண்டு குற்றாலத்திற்கு அடிக்கடி வருகை தந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வியாபாரிகள் , பொதுமக்கள் ஒத்துழைப்போடு பிளாஸ்டிக் பொருட்களை அறவே ஒழித்தார். இதனால் குற்றாலம் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்தாத சுற்றுலா ஸ்தலமாக உயர்ந்தது.

இந்நிலையில் குற்றாலத்தில் உருவாகி சுமார் 85 கி.மீ பயணம் செய்து தாமிரபரணியில் சங்கமிக்கும புனித நதியான சிற்றாற்றை தூர் வாரி, தூய்மை படுத்தி, புனரமைக்கும் திட்டத்தை கடந்த மாதம் 29 தேதி மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.

தற்போது சுமார் 5 கி.மீட்டர் தூர்வாரப்பட்ட நிலையில் அப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

இது குறித்து வருவாய் துறை மற்றும் நீர் வளத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பணிகள் தொய்வில்லாமல் நடைபெற உத்தரவு பிறப்பித்தார்.

சிற்றாறு மேம்படுத்தும் திட்டத்தின் மீது மாவட்ட கலெக்டர்  எடுத்து வரும் அக்கறை இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

விடுமுறை நாளென்றும் பாரமல் பணிகளை ஆய்வு செய்ததை பொது மக்கள் வியந்து பாராட்டினர்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

நிகழ்ச்சியில் இத்திட்டத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வரும் அண்ணா பல்கலை கழக துணை இயக்குநர் சக்திநாதன், தென்காசி ஆர்.டி.ஒ செளந்த ராஜன், தென்காசி தாசில்தார் சண்முகம், உதவி பொறியாளர் தங்க ஜெய்லானி, நல்ல பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related articles

Recent articles

spot_img