தூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ள இடத்தில் நிலம் கணக்கெடுக்கும் பணி தீவிரம்!

உள்ளூர் செய்திகள் தமிழகம் நெல்லை

sss - 2026தூத்துக்குடி மாவட்டம்  குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நில அளவீடு பணியானது முடிவடைந்த நிலையில்  தூத்துக்குடி மாவட்டம் கூடல்நகர் அருகே உள்ள அமராபுரம் என்ற பகுதியை மையமாக கொண்டு சுமார் 2.5  கி.மீ. சுற்றளவில் 3500 ஏக்கர் பரப்பளவில் இந்த ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நில அளவீடு பணி முழுமையாக முடிவடைந்த நிலையில், தற்போது அந்த 3500 ஏக்கர் பரப்பளவில் எத்தனை மரங்கள் உள்ளது? மக்கள் வாழ்வாதாரம் இருக்கிறதா? எத்தனை குடியிருப்புகள் இருக்கிறது? எவ்வளவு அகற்றப்பட வேண்டும்? என்பதற்கான அளவீடு பணியானது தொடங்கியுள்ளது.

திருச்செந்தூர் வட்டாட்சியர் மற்றும் அதற்கு கீழாக உள்ள ஆர்.ஐக்கள் மற்றும் வி.ஓக்கள் உள்ளிட்ட சுமார் 15க்கும் மேற்பட்டவர்கள் இந்த கணக்கிடும் பணியை தொடங்கியுள்ளனர். மேலும் பொதுப்பணித்துறையினரால் இங்குள்ள மரங்கள், குடிசைகள், நிலங்கள் ஆகியவற்றிக்கு இழப்பீடு வழங்கும் மதிப்பீடு பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக ராக்கெட் ஏவுதளத்திற்கான பூர்வாங்கும் பணி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த பணிகள் அனைத்துமே முடிவடைந்தால் மட்டுமே அடுத்தபடியாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பூர்வாங்கும் பணிகள் தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

1 thought on “தூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ள இடத்தில் நிலம் கணக்கெடுக்கும் பணி தீவிரம்!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.