சென்னை: சென்னையில் வியாழக்கிழமை இன்று முதல் சில்லறை விற்பனைக் கடைகளிலும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 250 மி.லி அளவு கொண்ட ஆவின் பாக்கெட் பால் விற்பனைக்கு கிடைக்கும் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 26.50 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. சென்னையிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மட்டும் நாள் ஒன்றுக்கு 11.67 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் ஆவின் பால் மாதாந்திர அட்டைகள் மூலம் சுமார் 7.5 லட்சம் லிட்டரும், மொத்த விநியோகஸ்தர்கள் மூலம் 4.17 லட்சம் லிட்டரும் விநியோகம் செய்யப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலை விட குறைந்த விலை, தரமான முறையில் கிடைக்கும் என்பதால் ஆவின் பாலை பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். சந்தையில் தற்போது 4 வகையான 500, 1,000 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட பாலை ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில், தற்போது பிப்ரவரியில் 250 மி.லி., அளவு கொண்ட பாக்கெட் பால் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் சென்னையில், ஒவ்வொரு பகுதியாக கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனை விரிவுபடுத்தப் பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது வியாழக்கிழமை இன்று முதல் சென்னை மாநகரில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை கடைகளிலும், முகவர்கள் வாயிலாக கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
சில்லறை விற்பனையில் கால் லிட்டர் ஆவின் பாக்கெட் பால்: இன்று முதல் கிடைக்கும்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari