சென்னைவாசிகளை பயமுறுத்திய தண்ணி லாரி வேலை நிறுத்தம் வாபஸ்!

chennai water lorry - 2026

தாகத்தால் தவிக்கும் சென்னைவாசிகளை பயமுறுத்தும் வண்ணம், நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்த தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மே 27 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு, தற்காலிகமாக வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப் பட்டது. இந்நிலையில், மீண்டும் நாளை முதல் போராட்டம் அறிவித்தனர் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள்.

முன்னர் அவர்கள் கோரிய கோரிக்கைகளில்…
* நிலத்தடி நீரை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும்.
* நிலத்தடி நீரை கனிம வளப் பிரிவில் சேர்த்துள்ளதால் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நிலத்தடி நீரை பெறுவதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் தொடர்பான தடையை நீக்க வேண்டும்.
* கனிம வளப்பிரிவில் இருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் – என்பவை பிரதானமாக இருந்தது. அவர்களுடன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள்  பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் தற்போது, லாரிகளில் தண்ணீர் எடுக்க இடமில்லை என்பதாலும், தண்ணீர் கிடைக்கும் இடங்களில் தண்ணீர் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழும்புரம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய சங்கத்தினர், பருவமழை பொய்த்ததாலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டதாலும் மக்கள் கடும் குடிநீர்ப் பிரச்னையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

லாரி நீருக்காக மக்கள் காத்திருக்கும் சூழ்நிலையில், தண்ணீர் கிடைக்கும் இடத்தை காட்டினால், தண்ணீர் எடுத்து மக்களுக்கு விநியோகிக்க தயாராக உள்ளோம் என்றும், தண்ணீர் எடுக்கும் இடத்தில் போதிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் போதிய பாதுகாப்பு அளிப்பதாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால் நாளை தொடங்கவிருந்த வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தனியார் தண்ணீர் லாரி சங்கத் தலைவர் நிஜலிங்கம் அறிவித்துள்ளார்.

முன்னதாக, அரசு அதிகாரிகள் தனியார் தண்ணீர் லாரிகளை சிறைபிடிப்பதை கண்டித்து 25 ஆயிரம் தண்ணீர் லாரிகள் ஓடாது என்றும் அச்சங்கம் தெரிவித்தது. சென்னை பள்ளிக்கரணையை அடுத்த கோவிலம்பாக்கத்தில், தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் மேடவாக்கம் நிஜலிங்கம், திருவள்ளூர் மாவட்டத்தில் 33 லாரிகள் உட்பட காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், தனியார் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார். தனியார் தண்ணீர் லாரிகள் நீரை எடுக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அங்குள்ள லாரிகளை உடனடியாக, அரசு அதிகாரிகள் சிறைபிடித்து விடுவதாக, அவர் கூறினார். இந்நிலையில் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories