தமிழ்நாடு அரசின் திருக்குறள் பரிசு பெற்ற பள்ளி மாணவிகளுக்கு கரூர் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், தமிழ் வருடப்பிறப்பான சித்திரை முதல் நாளில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 1330 திருக்குறளையும் முழுமையாக முற்றோதல் செய்யும் குழந்தைகளை தேர்ந்தெடுத்து 10 ஆயிரம் ரூபாய் பண விடையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு கடந்த 14 ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் கரூர் மாவட்டத்தை சார்ந்த காந்திகிராமம் சு.ர.திவ்யங்கா, புகளூர் மாணவி எஸ்.வைஷ்ணவி தேவி ஆகியோர் கரூர் மாவட்டத்தின் சார்பில் இந்த பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் அமைச்சர் வீரமணியிடம் இருந்து பெற்றார்கள். இவர்கள் தான் கரூர் மாவட்டத்தில் இருந்து முதன் முதலில் பரிசு பெற்றுள்ள குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து கரூரில் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் நடைபெற்ற விழாவில் திருக்குறள் பரப்புதல் மாவட்ட தலைவர் மேலை.பழநியப்பன், மூத்த அரிமா ஏ.எஸ்.ஜெனார்த்தனன், மாவட்ட ஆளுநர் கே.பிரேம், முன்னாள் ஆளுநர் ஈரோடு தனபால், திருச்சி முருகேஷன், மாவட்ட தலைவர் சுமங்கலி செல்வராஜ் உள்ளிட்டோர் பாராட்டினர். விழாவில் கரூர், பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், நொய்யல், புகளூர், உப்பிடமங்கலம், குளித்தலை, வெள்ளியணை உள்ளிட்ட லயன்ஸ் சங்கங்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.16-04-15 Karur thirukkural news photo 02 16-04-15 Karur thirukkural news photo 03