விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்த பரிதாபம் !

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் பொது தகவல்கள்

saraku rail 1 - 2026சென்னை, ராயபுரம், செட்டி தோட்டத்தைச் சேர்ந்தவர், சவுபாக்கியம், 35; வீட்டு வேலை செய்து வருகிறார். இவருக்கு, மூன்று மகன்கள் உள்ளனர்.இவரது, இரண்டாவது மகன், சுனில் குமார், 15, அதே பகுதியை சேர்ந்த, ராமு என்பவரது மகன், விஷால், 13, மற்றும் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, நேற்று மாலை, ராயபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில், கிரிக்கெட் விளையாடினார்.minsaram - 2026அப்போது, ராயபுரம் ரயில் நிலையத்திற்குள், பந்து விழுந்தது. பந்தை எடுக்க, சுனில்குமாரும், விஷாலும் சென்றனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சரக்கு ரயில் மீது ஏறி, பந்தை எடுக்க முயன்றனர்.அப்போது, தடுமாறி விழுந்தவர்கள்,உயர் அழுத்த மின்சார கம்பியை பிடித்ததில், இருவர் மீது, மின்சாரம் பாய்ந்தது. துாக்கி வீசப்பட்ட இருவரும், உடல் கருகிய நிலையில், ‘108’ ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து குறித்து, ராயபுரம் ரயில்வே காவல்துறை விசாரிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.