காஞ்சியில் சுவாமி தரிசனம்: தமிழர்கள் கொலை தொடர்பில் கருத்து கூற ஆந்திர ஆளுநர் மறுப்பு

காஞ்சிபுரம்: ஆந்திரப் பிரதேச ஆளுநர் நரசிம்மன் தமது மனைவியுடன் கார் மூலம் காஞ்சிபுரத்துக்கு வந்தார். அங்கே, 108 திவ்யதேசக் கோயில்களான பாண்டவதூதப் பெருமாள்- உலகளந்த பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் வளாகத்தில் அவரிடம் ஆந்திராவில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் எதுவும் கருத்து கூற இயலாது என்று கூறிச் சென்றார். பின்னர் அவர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்குச் சென்றார். ஆந்திர ஆளுநர் நரசிம்மன் வருகையை ஒட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.