December 6, 2025, 2:34 PM
29 C
Chennai

வைகோவிடம் உள்ள   அசையாசொத்து துரோகம் ஒன்றுதான்; காங்கிரஸ் எம்பி குற்றச்சாட்டு..!

manikkamthakuor mp - 2025

திமுக சார்பில் 17 ஆண்டு காலம் எம்.பி.யாக இருந்த வைகோ, கட்சிக்கு துரோகம் செய்ததை நாடு அறியும். துரோகம் என்பது வைகோவின் சொத்து என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறினார்.

விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இரண்டு முறை விருதுநகர் பாராளுமன்ற தொகுதி மக்களால் நிராகரிக்கப்பட்டவர்.

அதை தெரிந்தும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மதசார்பற்ற கூட்டணி சார்பில் மாநிலங்களவைக்கு வைகோவை வெற்றி பெற செய்தார்.

மதசார்பற்ற கூட்டணி மூலம்தான் வைகோ மாநிலங்களவை உறுப்பினராகி உள்ளார்.

டெல்லி சென்றதும் அவர் பிரதமர் மோடி, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியை சந்தித்தார்.

VAIKO T 1 - 2025

காஷ்மீர் பிரச்சினையில் மாநிலங்களவையில் பேசிய வைகோ, காஷ்மீர் மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்ததாக உண்மைக்கு புறம்பாக குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ காப்பாற்றியது காங்கிரஸ் கட்சி. இலங்கை பிரச்சினையில் தி.மு.க.வும், காங்கிரசும் துரோகம் செய்துவிட்டது என குற்றம்சாட்டி வந்த வைகோ, தற்போது காங்கிரஸ் இலங்கை மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறுகிறார்.

17 ஆண்டு காலம் தி.மு.க. சார்பில் எம்.பி.யாக இருந்த வைகோ, கட்சிக்கு துரோகம் செய்ததை நாடு அறியும். துரோகம் என்பது வைகோவின் சொத்து.

தேர்தலின்போது எங்கள் தொகுதிகளுக்கு பிரச்சாரத்திற்க அவர் வரவே இல்லை.

காங்கிரஸ் கட்சி எந்த காலத்திலும் யாருக்கும் எந்த துரோகம் செய்தது இல்லை.

காஷ்மீர் பிரச்சினையில் வைகோ பேசுவதற்கு மாநிலங்களவையில் 3 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டபோது, காங்கிரசை குற்றம் சாட்டி பேச போகிறேன், எனக்கு 10 நிமிடம் தாருங்கள் என அமித்ஷாவிடம் கேட்டார்.

vaiko 1 - 2025

பா.ஜ.க. தூண்டியதால்தான் வைகோ அவ்வாறு பேச தொடங்கினார்.

அவர் சென்னைக்கு வந்த பின்பும் காங்கிரசை குற்றம்சாட்டி பேசியதால் தான், நாங்களும் அவருக்கு பதில் சொல்ல வேண்டி உள்ளது.

கூட்டணியில் உள்ளவர்களின் குறைபாடுகளை வெளிப்படையாக பேசுவது இல்லை.

ஆனால் வைகோ, உண்மைக்கு புறம்பாக பேசியதால் அவரைப்பற்றி பேச வேண்டியதாகிவிட்டது. கூட்டணி தர்மத்தை கடைபிடிக்காத வைகோவை மக்கள் நிராகரிப்பார்கள்.

மத்திய அரசு கடந்த 5-ந்தேதி திடீரென மாநிலங்களவையில் காஷ்மீர் பிரச்சினை பற்றிய மசோதாவை கொண்டு வந்தது.

காங்கிரஸ் எம்.பி.க்கள் 12 பேர், கேரளா உள்ளிட்ட தொலைதூர மாநிலங்களில் இருந்து வரமுடியாத நிலையில் இருந்ததால் எதிராக வாக்களிக்க முடியவில்லை. எனவே அதுபற்றி குற்றம் சொல்லக்கூடாது.

அ.தி.மு.க. மக்களவையில் ஒரு தீர்மானததை ஆதரிக்கிறது, மாநிலங்களவையில் எதிர்க்கிறது. வெளிநடப்பு என்கிறார்கள்.

நாடக கம்பெனி போல் அ.தி.மு.க. செயல்படுகிறது. அமைச்சர்களும் நடிகர்கள்போல் செயல்படுகிறார்கள்.

முதலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அ.தி.மு.க. அரசு தடுத்து நிறுத்த முயற்சி எடுக்கட்டும். அ.தி.மு.க. அரசு கமி‌ஷன் அரசு. அவர்களின் செயல்பாட்டால் தமிழகம் பின்தங்கிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories