
வைத்தீஸ்வரன் கோயில், எனப்படும் திருப்புள்ளிருக்குவேளூர் அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் வைகாசி கிருத்திகையை முன்னிட்டு அருள்மிகு செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் காலம் என்பதால், திருக்கோயில்கள் அனைத்தும் பக்தர்கள் தரிசனத்துக்கு மூடப் பட்டிருக்கின்றன. வழக்கமான பூஜைகளை திருக்கோவில் அர்ச்சகர்களும் பட்டாச்சார்களும் மட்டுமே சென்று மேற்கொள்ள அரசு அனுமதி அளித்திருக்கிறது. இந்நிலையில் பெரும்பாலான பெரிய கோயில்களிலும் முக்கிய விசேஷங்களை திருக்கோயில் பணியாளர்களை வைத்து செய்து வருகின்றனர்.
Excellent alankaram to Bhagawan Hats of to the temple trustee who has done with great care I am luky to have darshan on screen