
பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகவும், பட்டியலின நீதிபதிகள் நியமனம் திமுக., போட்ட பிச்சை என்றும் பேசிய திமுக., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று காலை கைது செய்யப் பட்டார். இதற்கு திமுக.,வினர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்,
M.K.Stalin@mkstalinகொரோனா நோய்த் தடுப்பில் தோல்வியைத் திசை திருப்ப தன் மீது ஊழல் புகார் அளித்த @RSBharathiDMK யின் மீதான பழைய புகாரைத் தட்டி எடுத்து கைது செய்துள்ளார் @CMOTamilNadu. எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகள் கண்டு தி.மு.கவும் அஞ்சாது. அது தமிழக மக்களையும் திசை திருப்பாது… என்று தெரிவித்திருக்கிறார்.
அவரது கருத்துக்கு டிவிட்டர்வாசிகள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தக் கைது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள டி.ஆர்.பாலு,
பழிவாங்கும் நோக்கத்துடன் காவல்துறையை ஏவி கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தமிழக அரசு. ஆர்எஸ்.பாரதி கைது அநியாயமானது, அக்கிரமமானது , தேவையற்றது . கொரோனா தடுப்பு பணியில் திமுக தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் அதை தடுக்கவே கைது நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது என்று கூறினார்.
இதற்கும் இப்போது மீம்ஸ்கள் டிவிட்டர் பக்கங்களில் வலம் வருகின்றன.

முன்னதாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைதை கண்டித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.