
மலை உச்சியில் இருந்து கொண்டு வரப்பட்டது மகாதீப கொப்பரை .
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழாவின் பத்தாம் நாள் அன்று மாலையில் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுவது காலம் காலமாக நடைபெறுவது வழக்கம் . அதற்காகவே கோயிலில் இருந்து மகாதீப கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும் .
பத்தாம் நாள் மாலையில் தீபம் ஏற்றிய பின்பு பதினோரு நாட்கள் தொடர்ந்து தீபம் எரியும் . அதன்பின் மீண்டும் கோயிலுக்கு தீப கொப்பரை கொண்டு வரப்படும் .
அதன்படி நேற்று 09.12.2020 இரவோடு தீபம் ஏற்றி முடிக்கப்பட்ட நிலையில் இன்று அண்ணாமலையார் ஆலயத்திற்கு மகாதீப கொப்பரை கொண்டு வரப்பட்டது .
- எஸ்.ஆர்.வி. பாலாஜி, திருவண்ணாமலை