சென்னை வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் திட்ட பணி தீவிரம்..

images 75 - 2026

சென்னையில் வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் திட்டத்தில், எஞ்சியுள்ள அரை கி.மீ. தூரத்துக்கு பாதை அமைக்கும் பணிகளை முடித்து, ரயில் சேவையை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்க தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், ரயில் போக்குவரத்து சேவையை அதிகரிக்கவும் பறக்கும் ரயில் திட்டம் அமைக்க 1985-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை 3 கட்டங்களாக இத்திட்டத்தை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.

முதல்கட்டமாக கடற்கரை – மயிலாப்பூர் இடையே 9 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் ரயில் திட்டப் பணிரூ.266 கோடியில் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 1997-ல் நிறைவடைந்தது. 2-ம் கட்டமாக மயிலாப்பூர் – வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டப் பணி ரூ.877.59 கோடியில் கடந்த 2007-ல் முடிக்கப்பட்டது. இதன் பிறகு, வேளச்சேரி – பரங்கிமலை இடையே 3-ம் கட்ட பணி ரூ.495 கோடியில் கடந்த 2008-ல் தொடங்கியது. மொத்தம் உள்ள 5 கி.மீ. தூரத்தில் 4.5 கி.மீ. தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது.

இந்த சூழலில், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், ஆதம்பாக்கம் – பரங்கிமலை இடையே எஞ்சியுள்ள அரை கி.மீ. (500 மீட்டர்) தூரத்துக்கான பணிகள் மட்டும் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்தன. திட்டமிட்டபடி 2010-ல் பணிகள் முடியாததால், இதற்கான திட்ட மதிப்பீடு உயர்ந்தது.

இதற்கிடையே, நிலம் கையகப்படுத்தும் பிரச்சினைக்கு நீதிமன்றம் மூலம் கடந்த ஆண்டு தீர்வுகிடைத்தது. இதையடுத்து, ஆதம்பாக்கம் – பரங்கிமலை இடையே எஞ்சியுள்ள அரை கி.மீ. தொலைவுக்கான பணிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கி, முழு வீச்சில் நடந்து வருகின்றன.புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. இங்கு ரயில் பாதை, சிக்னல்கட்டமைப்புகளும் முடிவடைந்தன. பணிகள் எஞ்சியுள்ள பகுதியில் தூண்கள் அமைத்து, அதற்குமேல் பாதைகள் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெறுகின்றன. இதையடுத்து, பாதைகள் அமைக்கப்படும். இதுதவிர, மெட்ரோ ரயில் பாதைக்காக, தூண்கள் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது.இந்நிலையில், பணி நிலவரம் குறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் (பொறுப்பு) பி.ஜி.மல்லையா கூறியபோது, ‘‘நிலம்கையகப்படுத்துதல் பிரச்சினையால் 5 கி.மீ. தூரத்துக்கு பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. உச்ச நீதிமன்ற தலையீட்டுக்கு பிறகு, சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்தது. வேளச்சேரி – பரங்கிமலை இடையே 5 கி.மீ. தூர பறக்கும் ரயில் வழித்தடத்தில் (எம்ஆர்டிஎஸ்) முக்கியமான இறுதிகட்ட இணைப்பு பணிகள் 2023 மார்ச்சில் நிறைவடையும்’’ என்றார். இதற்கிடையே, வேளச்சேரி -பரங்கிமலை இடையே உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் போதிய பொது போக்குவரத்து வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர்.

இதுபற்றி தெற்கு ரயில்வே ரயில்வே அதிகாரிகள் கூறியபோது, ‘‘வேளச்சேரியில் இருந்துஆதம்பாக்கம் வரை 5 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் ரயில் திட்டம் ரூ.495 கோடியில் தொடங்கப்பட்டது. பின்னர், திட்ட மதிப்பீடு உயர்ந்து,ரூ.730 கோடியில் பணி நடைபெறுகிறது.

தற்போது அரை கி.மீ. தூரத்துக்கான பணிகளை மேற்கொள்ள ரூ.30 கோடி தேவை. பரங்கிமலையில் இந்த பறக்கும் ரயில் பாதை, சென்னை கடற்கரை – தாம்பரம் புறநகர் மின்சார ரயில் பாதையின் மேல் அமையும். இப்பணி 2023 மார்ச் மாதத்துக்குள் முடிந்து, பயன்பாட்டுக்கு வரும்’’ என்றனர்.

images 73 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Entertainment News

Popular Categories