கும்மிடிப்பூண்டி தச்சூரில் ஆம்னி பேருந்து – லாரி மோதியதில் 4 பேர் பலி..

WhatsApp Image 2022 12 05 at 11.38 .14 AM .jpeg - 2026

தச்சூரில் ஆம்னி பேருந்து – லாரி மோதியதில் 4 பேர் பலியாயினர் லிஃப்ட் கேட்டு ஏறிய ஓட்டுநரும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் பகுதியில் திங்களன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பேருந்து, டேங்கர் லாரி மோதிய விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து தனியார் பேருந்து சென்னை நோக்கி 30 பேருடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து கும்மிடிப்பூண்டி அடுத்த  கவரப்பேட்டை அருகே தச்சூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற டேங்கர் லாரி பிரேக் போட்டதால் டேங்கர் லாரி பக்கவாட்டில் மோதியது.

இந்த விபத்தில் தனியார் பேருந்து ஒரு பக்கம் முழுவதும் சிதிலமடைந்து அதில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

WhatsApp Image 2022 12 05 at 11.38 .12 AM .jpeg - 2026

இதில் பேருந்தில் பயணித்த ஆந்திர மாநிலம் நெல்லூர் விடவல்லூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(27), பெங்களூர் ரூப தூங்கா நகர் ரோகித் பிரசாத்(24),  ஸ்ரீதர்(22) சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இதில் சென்னை மாநகர போக்குவரத்தைச் சேர்ந்த பாடியநல்லூர் பணிமனை ஓட்டுநரான தண்டலசேரி ஜானகிராமன் (42) புதுவாயில் பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தில் லிஃப்ட் கேட்டு ஏறி ஓட்டுநர் அருகில் அமர்ந்துள்ளார். புதுவாயிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணித்த நிலையில், பேருந்து விபத்துக்குள்ளாகி, படுகாயமடைந்து ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் சென்னை மணப்பாக்கத்தை சேர்ந்த கிருபா ஸ்ரீ (58), விஷ்ணுபிரியா (25), பெசண்ட் நகரைச் சேர்ந்த சாய் பவன் (21) படுகாயத்துடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்ததும் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியாசக்தி தலைமையில், கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் மற்றும் கவரப்பேட்டை போலீசார் ஆகியோர் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டதோடு, போக்குவரத்து பாதிப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்து குறித்து கவரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories