உ.பி.யில் இருந்து ஜாக்குவாரில் சென்னை வந்த கொள்ளையர்கள்..

images 2023 02 21T114840.708 1 - 2026

உத்தரப்பிரதேசத்திலிருந்து ஜாக்குவார் காரில் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு சென்னை வந்த நால்வர்களில் இருவர் சிக்கினர்.மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈசிஆர் சாலையில் ஒரு வீட்டில் ரூ.1,000 மற்றும் இரண்டு ஜோடி செருப்புகளைக் கொள்ளையடித்த நிலையில் காவல்துறையிடம் சிக்கியுள்ளனர்.

இந்த ஜாக்குவார் கார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபருடையது என்பதும், சரியாக மாதத் தவணை செலுத்தாததால், பறிமுதல் செய்துவிடுவார்களோ என்று ரௌடிகளிடம் அவர் இந்தக் காரை கொடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்த கொள்ளையர்கள் புனித் குமார் மற்றும் ராஜேஷ் குமார் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டள்ளனர். தலைவனாக செயல்பட்ட இர்ஃபான்  மற்றும் சுனில் குமார் யாதவை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

images 2023 02 21T115615.217 - 2026

இர்ஃபான் மனைவி பஞ்சாயத்துத் தலைவராக இருப்பதாகவும், அவர் கொள்ளையடித்துச் செல்லும் பொருள்களை எல்லாம், கிராமத்தில் இருக்கும் ஏழைகளுக்கு அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும், பள்ளிக் குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்துவது, கண் சிகிச்சைக்கு நன்கொடை அளிப்பது போன்றவற்றில் ஈடுபட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இர்பான் நாடு முழுவதும் பல்வேறு கொள்ளை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இவர் தனபால் சிங்கிடமிருந்து ஜாகுவார் காரை வாங்கியுள்ளனர். 

பிறகு இந்த ஜாகுவார காரை எடுத்துக் கொண்டு சென்னை வந்து இங்குள்ள தொழிலதிபர்களின் வீடுகளில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி சென்னை வந்து நீலாங்கரையில் உள்ள வீடுகளை நோட்டமிட்டுள்ளனர்.

பிப்ரவரி 6ஆம் தேதி இர்பான் தனது கூட்டாளிகளுடன் ஒரு வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். ஆனால் காவலாளி கூச்சலிட்டதால் அங்கிருந்து தப்பியோடி வந்துள்ளனர். மற்றொரு வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அங்கு எதுவுமே இல்லை. சுல்தான் என்பவருக்குச் சொந்தமான அந்த வீட்டில் வெறும் 1000 ரூபாய் ரொக்கம் மற்றும் சில காலணிகளை திருடிக் கொண்டு வெளியே வந்துள்ளனர்.

இது குறித்து சுல்தான் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பிப்ரவரி 6ஆம் தேதி இரவு ஒரு ஜாகுவார் கார் அப்பகுதியை சுற்றி சுற்றி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

உடனடியாக கார் எண்ணைக் கொண்டு தனபாலை தொடர்பு கொண்டு பேசினர். இதற்குள் அந்தக் கார் தடா சுங்கச்சாவடியை தாண்டியதை அறிந்தனர். ஆனால் அந்த காரின் நம்பர் பிளேட் மாற்றப்பட்டுள்ளது. தொடர் விசாரணை நடத்திய காவல்துறையினர், உத்தரப்பிரதேசம் சென்று சுனில் குமாரின் சகோதரர் ராஜேஷ் குமார் மற்றும் புனித் குமாரை கைது செய்தனர். கொள்ளைக் கூட்டத் தலைவன் இர்ஃபானை தேடி வருகிறார்கள்.இச் சம்பவம் காவல் துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories