நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

965171 - 2026

நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியம் இன்று  அதிகாலை காலமானார். அவருக்கு வயது 84. நீண்ட காலமாகவே பக்கவாதம் மற்றும் வயது மூப்பின் காரணமான தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டிருந்த பி.சுப்பிரமணியம் இன்று காலை இயற்கை எய்தினார்.

இந்தத் தகவல் வெளியானதை அடுத்து சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அஜித் தந்தை சுப்பிரமணியத்தின் உடல் இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட்டதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

IMG 20230324 WA0074 - 2026

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், “நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் திரு.அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். “நடிகர் அஜித் தந்தை சுப்பிரமணியம் மறைவு செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். தந்தையை இழந்துவாடும் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று ட்வீட் செய்துள்ளார்.

அஜித்தின் தந்தை மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட இரங்கல் செய்தி: தமிழகத்தின் பிரபல திரைப்பட நடிகர், அன்பு சகோதரர் அஜித்குமார் அவர்களின் தந்தை பி.சுப்ரமணியம் அவர்களின் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். தந்தையை இழந்து வாடும் அவருக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி..!. இவ்வாறு அதில் தெரிவித்தார்.

 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்ந நவலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.ஓம் சாந்தி!” என்று பதிவிட்டுள்ளார்.

வி.கே.சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில், “தனது தந்தையை இழந்து இருக்கும் இந்த கடினமான நேரத்தில் அன்பு சகோதரர் அஜித் அவர்களுக்கு இதனை தாங்கிக்கொள்ளும் மனவலிமையையும், தைரியத்தையும் வழங்க வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன். தந்தையை இழந்து வாடும் அன்பு சகோதரர் அஜித் அவர்களுக்கும்,அவரது குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும்,அவருடைய ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories