images 2023 03 31T174745585 - 2026

பாடகர் விஜய் ஏசுதாஸ் வீட்டில் 60 சவரன் திருட்டு..

கிரைம் நியூஸ் சென்னை

அன்மையில் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் 200 பவுன் நகை திருடுபோன நிலையில் சென்னை அபிராமபுரத்தில் வசித்து வரும் பாடகர் விஜய் ஏசுதாஸ் வீட்டில் 60 சவரன் திருடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் திருடு போன நகைகள் குறித்து கடந்த மாதம் தான் தெரியவந்ததாக போலீசில் புகார் அளித்தார். விஜய் ஏசுதாஸ் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

images 2023 03 31T174745585 - 2026
#image_title

பிரபல பின்னணி பாடகரான விஜய் ஏசுதாஸ், அவரது மனைவி தர்ஷனா பாலகோபால் ஆகியோர் சென்னை அபிராமபுரம் 3வது தெருவில் வசித்து வருகின்றனர். இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 60 சவரன் நகை மற்றும் வைரம் பதித்த சில தங்க நகைகளை கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி பார்த்துள்ளார்.

அதன் பின்னர் கடந்த பிப்ரவரி 18ம் தேதி விஜய் ஏசுதாஸ் மனைவி தர்ஷனா பாலகோபால் நகை இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது நகைகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அவர் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். மேலும் நகைகள் காணாமல் போனது தொடர்பாக போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளார்.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இந்நிலையில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அபிராமபுரம் காவல் நிலையத்தில் நகைகள் காணாமல் போனது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில் அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய் ஏசுதாஸ் வீட்டில் பணியாற்றும் நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.