சென்னை- கோவை வந்தே பாரத் சென்னையில் ஏப்‌8 இல் துவக்கி வைக்கிறார் பிரதமர்..

965674 - 2026
#image_title

வந்தே பாரத் சேவையை சென்னையில் வரும் ஏப்‌8 இல் துவக்கி வைக்கிறார் பிரதமர். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை துறை அதிகாரிகள் திட்டமிட்டு செய்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில், 2.36 லட்சம் சதுரமீட்டரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. மொத்தம் 5 தளங்களில் அமைந்துள்ள இந்த புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், பயணிகளின் எண்ணிக்கை 2.2 கோடியில் இருந்து, சுமார் 3 கோடியாக அதிகரிக்கும். இந்த புதிய முனைய கட்டிடத்தில் தமிழக கலாச்சாரம் மற்றும் பெருமைகளைப் பிரதிபலிக்கும் வகையில் வண்ண மயமான கோலங்கள், படங்கள், ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 80 சோதனை கவுன்ட்டர்கள், 8 சுயசோதனை கவுன்ட்டர்கள், 6 லக்கேஜ் கவுன்ட்டர்கள் மற்றும் 108 குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்யும் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணிகள் சோதனைகளை எளிதில் முடித்துக்கொண்டு செல்ல முடியும். புதிய முனையத்தின் கீழ்தளத்தில், விமான பயணிகளின் உடமைகள் கையாளப்படும். மேலும், மல்டி லெவல் கார் பார்க்கிங், ஷாப்பிங் மால், திரையரங்குகள் அமைக்கப்பட்டு, அவை கடந்த பிப். 4-ந்தேதி பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 8-ந்தேதி பிற்பகலில் திறந்து வைக்கவுள்ளார். இதுதவிர, சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூர் இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடக்கிறது.

இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. வந்தே பாரத் ரெயில் புறப்படும் நேரம், நிறுத்தங்கள், கட்டண விவரம் போன்றவை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதுதவிர, தாம்பரம்-செங்கோட்டை இடையே வாரம் 3 முறை விரைவு ரெயில் சேவையைத் தொடங்கிவைத்து, ரூ.294 கோடியில் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. தொலைவுக்கு முடிக்கப்பட்டுள்ள அகலப் பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

இந்த விழாவுக்காக பல்லாவரம் அருகேயுள்ள ராணுவ மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல, ஏப். 8-ந்தேதி மாலை மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

அன்று இரவு ராஜ்பவனில் தங்கும் பிரதமர், கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை துறை அதிகாரிகள் திட்டமிட்டு செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories