
கொரோனா, அப்படி இப்படி என்று மூச்சுவிட்டு… வெகு நாட்களுக்குப் பிறகுதான்… மெரினா கடற்கரைக்கு காரில் சென்றிருந்தேன்.
அதிகபட்சம் ஒன்றரை மணி நேரம் பார்க்கிங் செய்திருப்போம். காரை எடுக்கும் போது ஒரு பையன் யூனிபார்ம் டாக் எல்லாம் போட்டுகொண்டு வந்து ஸ்மார்ட் பார்க்கிங் 100 ரூபாய் என்றான்.
ஸ்மார்ட் பார்க்கிங் – சனிக் கிழமை என்பதால் 100, மற்ற நாள் என்றால் 60 என்றான். ரசீது கொடு என்று கேட்ட போது எஸ் எம் எஸ் வரும் என்றான்… ஏதோ வந்தது போல இருந்தது. ஆனால் கட்டணம் குறித்த மெசேஜ் எதுவும் போனில் இல்லை.
என்னவோ பிராடு பண்றான் என்று மட்டும் தோன்றியது. சரி எதற்கு தகராறு என்று நினைத்து, கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்து கூகிளில் போட்டு தேடிப் பார்த்தால் 1 மணி நேரத்திற்கு காருக்கு 20 ரூபாய் தான் என்று செய்திகள் காட்டுகிறது.
11 மணிக்கு மேல்உங்கள் கார் புக்கிங் குளோஸ்டு என்று மெசேஜ் வருகிறது. பணம் பெற்று கொண்டதற்கான மெசேஜ் ஒன்றும் வரவில்லை.
உண்மையில் மெரினாவில் கார் பார்க்கிங் கட்டணம் என்ன? ஏமாற்றுகிறார்களா? பார்க்கிங் பணம் கட்டியதை ஏமாறாமல் ரசீதை சரி பார்க்க என்ன வழி? யாருக்கேனும் தெரிந்தால் சொல்லவும்.
- வி.ராம்குமார், சென்னை