வங்கிக்கு வந்து சேர்ந்த நிவாரணப் பணம்: ஏடிஎம் மையங்களில் கூட்டம்

சென்னை உள்ளிட்ட வெள்ளம் பாதித்த மக்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்ட தொகை அவரவர் கணக்குக்கு இன்று காலை வந்து சேர்ந்தது. பணம் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருப்பது குறித்து வங்கிகளில் இருந்து பொதுமக்களுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) இன்று காலை முதல் வரத் தொடங்கியது. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி முதல் கட்டமாக இன்று வந்ததை தொடர்ந்து வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.