சென்னை

இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்து விளக்குகிறார் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்

இத்தகைய சூழலில் அவர் மீது குற்றம் சுமத்தி, ஆளுநரை வெளியேற்ற பல்வேறு சதிவலைகளை ஆளுநர் மாளிகையில் இருப்போர் உள்பட அரசியல்வாதிகள் பின்னி வரும் நிலையில், அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா ஆளுநர் பெயரை இழுத்து மோசமான குற்றச்சாட்டை சுமத்துகின்ற வேலையில் இறங்கியுள்ளார். இத்தகைய சூழ்நிலையில், ஆளுநர் இன்று மாலை பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

நிர்மலா தேவி விவகாரத்தில் திடீர் திருப்பங்கள்…! என்னதான் நடக்கிறது மேல் மட்டத்தில்?!

முன்னதாக, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற புகாரில் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தினார். இந்நிலையில், அவரிடம் இருந்து அவர் பயன்படுத்தி வந்த 3 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

காவிரியில் துரோகம் இழைக்கும் காங்கிரஸை திமுக., கூட்டணியில் இருந்து வெளியேற்றும்? : ஹெச்.ராஜா நம்பிக்கை!

சென்னை: காவிரியில் துரோகம் இழைக்கும் சித்தராமையாவின் காங்கிரஸ் கட்சியை திமுக., கூட்டணியில் இருந்து வெளியேற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

யாருக்காக இந்த ஈனச் செயல்?: வழக்கை சிபிஐ.,விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: கல்லூரி மாணவிகளை உயர் அதிகாரிகளின் பாலியல் தேவைக்கு இணங்குமாறு, பேராசிரியை நிர்மலா தேவி கூறிய விவகாரத்தில் சிபிஐ., விசாரணை தேவை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

எம்ஜிஆர்-101: இதயக்கனி இதழ் சார்பில் நடத்தப்பட்ட பிரமாண்ட விழா!

எம்.ஜி.ஆர்.க்கு என்றே நடத்தப்பட்டு வரும் இதயக்கனி இதழின் சார்பில், எம்ஜிஆர் 101 என்ற விழா நடத்தப் பட்டது. இதழின் ஆசிரியர் இதயக்கனி விஜயன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில், திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

காவலரைத் தாக்கிய நாம் தமிழர் தொண்டர் அடையாளம் தெரிந்தது! கண்டறிய உதவுமாறு வேண்டுகோள்!

காவலரைத் தாக்கிய நாம் தமிழர் தொண்டர்அடையாளம் தெரிந்தது! கண்டறிய உதவுமாறு வேண்டுகோள்!
- 2026

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல்!

சென்னை: சென்னையில் வழக்கம்போல் உடற்பயிற்சிகளைச் செய்து கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மீது சமூக விரோத குண்டர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர்.

ஆளுநர் மாளிகை முற்றுகைப் பேரணிக்கும் அட்சய திருதியைக்கும் என்ன தொடர்பு?

அவர்களை நகைக் கடைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய முக்கியப் பணி இருப்பதன் காரணத்தால் இந்த முற்றுகைப் பேரணி 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு, இவர்களை ஒரு பிடி பிடித்துள்ளனர் வலைத்தளவாசிகள்!

கறுப்புக் கொடிக்கு திரண்டதை விட அதிகக் கூட்டம்! : எல்லாம் சமந்தாவைப் பார்க்கத்தான்..!

கடந்த வாரம் சென்னையில் நடந்த ஐபிஎல்., எதிர்ப்புக் கூட்டத்தை விடவும், மோடிக்கு கறுப்புக் கொடி காட்ட பல்வேறு கட்சிகள் திரட்டிய கூட்டத்தை விடவும், சமந்தாவைக் காண்பதற்கு தானாக அதுவும் குறுகிய நேரத்தில் கூடிய கூட்டம் மிக அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

’ஸ்கீம்’க்கு விளக்கம் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு முறையாக பரிசீலித்து முடிவெடுக்கும் என்றார் ஜெயக்குமார்.

சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும்: செங்கோட்டையன்

சிறப்பாசிரியர் தேர்வில், கீ ஆன்சர் வெளியிட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இன்று சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

கர்நாடக சிறையில் இருந்த வீரப்பன் கூட்டாளி சைமன் மரணம்

சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனின் கூட்டாளியாக இருந்த சைமன் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 1993ம் ஆண்டு ஜுன் மாதம் கைது செய்யப் பட்டார்.
- 2026

Recent articles