சென்னை

ராணுவ கண்காட்சியைப் பார்வையிட திரண்ட மக்கள்: 3 லட்சம் பேர் பார்வையிட்டு சாதனை

தங்கள் குழந்தைகளுக்கு ராணுவத் தளவாடங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள சிறந்த வாய்ப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ள பெற்றோர், அவர்களை நாட்டுக்காக ராணுவத்தில் சேர்க்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கண்காட்சி இருப்பதாகத் தெரிவித்தனர்.

சென்னை ஜே.ஜே.நகர் காவல் உதவி ஆணையர் கமீல்பாஷா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: மறைக்கப்பட்ட உண்மை!

ஆனால் சென்னையில் லஞ்சம் வாங்கும் போது, உதவி ஆணையர் பிடிபட்டார் என்ற செய்தி பரவினால், சென்னை மாநகர போலீசார் மீது அதிருப்தி ஏற்படும் என்பதால், பல உண்மைகள் மறைக்கப்படுவதாக காவலர்களே அதிருப்தியுடன் பேசிக் கொண்டிருக் கின்றனராம்!

நாம் தமிழர் கட்சியினரை மிரட்டுவதை போலீஸார் நிறுத்திக் கொள்ள வேண்டும்: சீமான் எச்சரிக்கை!

இன்று சீமான் சொன்னதில் உண்மை இருக்கிறதா? அல்லது ஏப்.11 அன்று சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் சொன்னதில் உண்மை இருக்கிறதா? போலீஸாருக்கே வெளிச்சம்!போலீஸார் மீது கைவைக்க நியாயவாதம் கற்பிக்க முயலும் சீமான் போன்றவர்கள் அறிவுரை கூறித் திருத்தப் பட வேண்டியவர்கள் அல்லர்!

தீக்காயத்துடன் போராடிய வைகோ.,வின் உறவினர் சரவணன் சுரேஷ் உயிரிழப்பு

நியூட்ரினோவுக்கு எதிராக வைகோ நடைப்பயணம் கிளம்பிய போது, மதுரையில் வைகோவின் மிக நெருங்கிய தொண்டர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டார். அப்போது யாரும் தீக்குளிக்க வேண்டாம் என்று வைகோ வருந்திக் கேட்டுக் கொண்டார்.

அம்பேத்கர் பிறந்த நாளா; நினைவு நாளா? குழம்பிய குஷ்பு!

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்தநாளை  அம்பேத்கரது நினைவுநாள் என தவறாகக் குறிப்பிட்டார்.

ஹெச்.ராஜா பேசுவது தனிப்பட்ட கருத்தாகத் தெரியவில்லை: மு.க.ஸ்டாலின்

காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க, நாளை மறுநாள் சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 2026

ராணுவ தளவாடக் கண்காட்சியைக் காணக் குவியும் பொதுமக்கள்!

இந்நிலையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆதார் கார்டு பான்கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை காட்டியபிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு: ஆளுநர் பேச்சு

தொல்காப்பியர் கூற்றுப்படி சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்று சென்னைக்கு அருகே திருவிடந்தையில் நடக்கும் ராணுவ கண்காட்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசினார். 

ஆளுநர் மாளிகையில் போர்வை தலையணை வாங்கியதில் முறைகேடு: 2 பேர் கைது

இது தொடர்பாக பர்னிச்சர் கடையின் உரிமையாளர் முகமது யூனுஸ் சேட் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், போலி பில் தயாரித்து மோசடியில் உடந்தையாக இருந்த ராஜேஷ், ஜஸ்டின் என்ற ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 2 பேரை கிண்டி போலீசார் கைது செய்தனர்.

போராட்டம் நீங்கி புதுவாழ்வு மலர ரஜினி காந்த் புத்தாண்டு வாழ்த்து

அவரது வாழ்த்தில், உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமைய

மே 2 ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

மே 2ம் தேதி முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கை நடைபெறும்; கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்; விடுமுறை நீட்டிப்பு கிடையாது என்று அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார். 

மோடி திரும்பிப் போ… கோஷத்துக்கு ‘சோ’ சொன்ன பதில்..!

மேலும், இங்க போஸ்டர்லாம் ஒட்டிருக்காங்க..மோடி திரும்பிப் போன்னு. திரும்பித்தான் போகப் போறார். என்ன மெட்ராஸ்லயேவா இருக்கப் போறார்? என்றார்.
- 2026

Recent articles