சென்னை: போராட்டங்கள் நீங்கி புதுவாழ்வு மலரட்டும் என ரஜினி காந்த் டிவிட்டரில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அவரது வாழ்த்தில், உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும் அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள வேண்டும்; புத்தாண்டு நல்வாழ்த்துகள். – என்று கூறியுள்ளார்.
உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும் அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள வேண்டும்; புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
— Rajinikanth (@rajinikanth) April 14, 2018