ஜூலை 6ல் பாஜக., சார்பில் கீழ்பவானி பாசன வாய்க்கால் பணி ஆய்வு: அண்ணாமலை பங்கேற்பு!

Published:

erode bjp news - 2026

கீழ்பவானி பாசன வாய்க்கால் முதற்கட்ட ஆய்வுப்பணியை ஜூலை 6-ம் தேதி கடைமடை மங்கல்பட்டியில் துவக்குகிறது பாஜக விவசாய அணி.

ஈரோடு தெற்கு மாவட்டம் பச்சப்பாளியில் பாஜக விவசாய அணி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பாஜக விவசாய அணி தலைவரும்,ஆய்வுக்குழு தலைவருமான G.K.நாகராஜ் தலைமை வகித்தார். மொடக்குறிச்சி சட்டமன்ற எம்.எல்.ஏ Dr.சரஸ்வதி, மாவட்ட தலைவர் S.T.செந்தில்குமார் உள்ளிட்ட கரூர், திருப்பூர் தெற்கு,வடக்கு,ஈரோடு மாவட்ட பாஜக விவசாய அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :-

v  கீழ்பவானி பாசன வாய்க்காலில் திமுகவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தும் வகையில் வரும் ஜூலை 6-ம் தேதி கடைமடையான மங்கல்பட்டி கிராமத்திலிருந்து முதற்கட்ட ஆய்வுப்பணியை நடைபயணமாகவும்,இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களிலும் சென்று ஆய்வுப்பணியை மேற்கொள்வது.

v  விவசாய அணி மாநில தலைவர் G.K.நாகராஜ் தலைமையில் நடைபெறும் இந்த ஆய்வை மாநில தலைவர் அண்ணாமலை, மொடக்குறிச்சி சட்டமன்ற எம்.எல்.ஏ. Dr.சரஸ்வதி, தேசிய பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான S.K.கார்வேந்தன் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.

ALSO READ:  கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

v  இந்த ஆய்வின்போது அனைத்து பாசன விவசாயிகளையும் சந்தித்து கருத்து கேட்கப்படும்.

v  கால்வாயின் தற்போது நிலை குறித்து புகைப்பட ஆதாரத்துடன் ஆய்வு மேற்கொள்ளப்படும்.         

v  மொத்த மரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

v  மேலும் கிளை வாய்க்கால் தற்போது நிலை குறித்தும் ஆய்வு செய்யப்படும்.

ஜூலை 6-ம் தேதி ஆய்வு செய்ய மாநில செயலாளர் லோகேஷ் தலைமையில் பல்வேறு குழுக்கள்  அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

Related articles

Recent articles

spot_img