மோசமான வானிலை- ஜனாதிபதியின் குன்னூர் பயணம் ரத்து..

gallerye 044551257 3246246 1 - 2026

நீலகிரி மாவட்டத்தில் மேகமூட்டம் நிலவி வருவதால், ஜனாதிபதி திரவுபதி மும்முவின் நீலகிரி பயணம் ரத்து செய்யப்பட்டது.

மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் நிலவுவதால் ஹெலிகாப்டரில் செல்ல முடியாத சூழல் இருப்பதால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று தமிழகம் வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் மதுரை விமான நிலையத்திற்கு அவர் வந்தார். அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் காரில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, மீனாட்சி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டார். தொடர்ந்து கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து, கோவிலில் உள்ள சிற்பங்களையும் வியந்து பார்த்தார். மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனத்தை முடித்து கொண்டு அவர் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தார். தொடர்ந்து மதுரை பயணத்தை முடித்துக்கொண்டு அவர் கோவைக்கு புறப்பட்டார். நேற்று மாலை 3.10 மணிக்கு அவர் கோவை விமான நிலையம் வந்தார்.

அங்கும் அவருக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் காரில் ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவர், அங்கு சிறிது நேர ஓய்வுக்கு பிறகு மாலையில் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார். அங்குள்ள லிங்க பைரவி தேவி, நந்தி சிலையை வழிபட்டார். தொடர்ந்து ஆதியோகி சிலை முன்பு நடந்த மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு ஜனாதிபதி மீண்டும் ரேஸ்கோர்சில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்தார்.
இரவு அங்கு தங்கினார்.

இன்று காலை ஜனாதிபதி திரவுபதி முர்மு நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு சென்று போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை முதல் நீலகிரி மாவட்டத்தில் மேகமூட்டம் நிலவி வருவதால், ஜனாதிபதி திரவுபதி மும்முவின் நீலகிரி பயணம் ரத்து செய்யப்பட்டது. மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் நிலவுவதால் ஹெலிகாப்டரில் செல்ல முடியாத சூழல் இருப்பதால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணியளவில் கோவை விமானநிலையத்தில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லி புறப்பட்டு சென்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories