வயித்துவலின்னு ஆஸ்பத்திரி போனாரு… கொரோனான்னு ‘ரெஃபர்’ பண்ணிட்டாங்களாம்!

Published:

madurai rajaji hospital
madurai rajaji hospital

மதுரை, வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்ன நாகராஜன் 30 இவர் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறார் இவருக்கு சோழவந்தானில் சேர்ந்த மலை பாண்டி மகள் நந்தினி திருமணம் நடந்துள்ளது

அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் ஒரு வாரமாக சின்னநாகராஜனுக்கு உடல்நிலை சரியில்லாமல் வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார் இதனால் சோழவந்தானில் கீழபச்சேரி பகுதி உள்ள மாமியார் பால்பாண்டி வீட்டிற்கு வந்துள்ள இவர் இங்குள்ள ஆஸ்பத்திரியில் கடந்த 9ஆம் தேதி இரவு வயிற்றுவலி இருப்பதாக சிகிச்சை பெற்றுள்ளார்

சிகிச்சை பயனளிக்காததால் நேற்றைய முன் தினம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சின்ன நாகராஜன் சென்றுள்ளார் அங்கு அவருக்கு கொரோணா தொற்றுநோய் இருப்பதாக கண்டறிந்துள்ளனர் பேரூராட்சி மற்றும் சுகாதாரத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது

இதன் பேரில் தெரிந்து சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான்பானு,சுகாதார ஆய்வாளர் குருசங்கர், இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார், கல்யாண சுந்தரம்,மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணன், பிரபாகரன்,தூய்மை பணியாளர்கள் உட்பட பணியாளர்கள் அவர் தங்கியிருந்த வீட்டைச் சுற்றி உள்ள பகுதியில் சுகாதாரப் பணி மேற்கொண்டு இப்பகுதியில் உள்ள மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

சின்ன நாகராஜன் மாமியார் பால்பாண்டி, மனைவி நந்தினி, இரண்டு குழந்தைகள்,மைத்துனர் அண்ணாமலை,இவரது மனைவி சிந்து ஆகிய ஆறு பேருக்கும் ரத்தப்பரிசோதனை செய்துள்ளனர் இவர்கள் 6 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளனர் சின்ன நாகராஜன் கச்சைகட்டி கிராமத்தில் தோட்டத்தில் தனி வீட்டில் குடியிருந்த இருந்துள்ளார் … இவருக்கு கொரோணா தொற்றுநோய் எப்படி பரவியது என்று சுகாதாரத்துறை மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Related articles

Recent articles

spot_img