சிலம்பு; ஒட்டுமொத்த சேம்பியன் பட்டம் வென்ற விருதுநகர்!

Published:

virudhunagar champion - 2026

மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் 18 மாவட்டங்களைச்  வீரர்கள் பங்கேற்றனர். இதில் விருதுநகர் மாவட்டம் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றது!

மதுரை மாவட்டம் மாடக்குளத்தைச் சேர்ந்த கேபி சிலம்பம் அகாடமியின் மகா குரு பா.அன்பு சேகர்  தலைமையில், விழா ஒருங்கிணைப்பாளர் வீர மணி மகா குரு ஆக்ஷன் மணிகண்டன் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப போட்டியினை, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் விதமாக மாநில அளவிலான இரண்டு நாள்  சிலம்பப் போட்டி திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில், மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, நாமக்கல், தென்காசி விருதுநகர் உள்ளிட்ட உள்ளிட்ட 18 மாவட்டங்களைச் சேர்ந்த சிலம்ப வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இவர்களில்6 வயதில் இருந்து 25 வயது வரையில் ஒற்றை கம்பு வீச்சு,இரட்டை கம்பு வீச்சு சுருள் வீச்சு, தொட்டு முறை போட்டி என4 பிரிவுகளில் போட்டிகள்  நடத்தப்பட்டன. 

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை விருதுநகர் மாவட்டம் தட்டிச் சென்றது.

Related articles

Recent articles

spot_img