
காஞ்சிபுரத்தில், தொன்மையான மதங்கீஸ்வரர் கோவிலில், நாளை காலை, கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

காஞ்சிபுரத்தில், தொன்மையான சைவ, வைணவ கோவில்கள் பல உள்ளன. இதில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் ஏழு கோவில்கள் உள்ளன.

அதில் ஒன்றான, பேருந்து நிலையம் அருகில், மருத்துவமனை சாலையில் உள்ள மதங்கீஸ்வரர் கோவில். சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்கும் இக்கோவிலில், 20 ஆண்டுகளுக்கு முன், கும்பாபிஷேகம் நடந்தது.

இதையடுத்து, சில நாட்களாக நடந்து வந்த திருப்பணி, சமீபத்தில் நிறைவடைந்ததை அடுத்து, நாளை காலை, 6:30 மணிக்கு, கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.