மதுரை அருகே திருவேடகத்தில் வைகை ஆற்றில் மஹாளய அமாவாசை தர்ப்பணத்துக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், திருவேடகம் வைகை ஆற்றில், மஹாளய அமாவாசைக்கு புதன்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவேடகம் வைகை ஆற்றில் பல ஆண்டுகளாக அமாவாசை தர்ப்பணம் நடந்து வருகிறது.
கொரோனா காலம் என்பதால், தை மற்றும் ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம், செய்ய அரசு தடை விதித்திருந்தது.
இதனால், பொதுமக்கள் தர்ப்பணம் செய்ய முடியாமல், திருவேடகம் ஏடகநாதரை வழிபட்டு திரும்பினர்.
கொரோனா காலம் என்பதால், வருவாய் மற்றும் போலீஸார் இணைந்து, திருவேடகம் வைகை ஆற்று தர்ப்பணம் செல்லும் பாதையை, தகரத்தை வைத்து அடைத்து தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
இதேபோல, மதுரை வைகை நதியிலும், நதிக்கரைகளில் போலீஸார், மஹாளய அமாவாசையன்று தர்ப்பணம் செய்ய போலீஸார் தடை விதித்துள்ளனர்.