தமிழக சிவ ஆலயங்களில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்!

ஆன்மிகச் செய்திகள் மதுரை
karthigai somavaram telugu
karthigai somavaram telugu

மதுரை: தமிழகத்தில் உள்ள சிவ ஆலயங்களில், கார்த்திகை மாதத்தில் சோமவாரத்தில், ( திங்கள்கிழமை) சிவனுக்கு சங்காபிஷேகம் நடைபெறும்.ஓவ்வொரு ஆண்டும், கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு, சிவ ஆலயங்களில், சிவனுக்கு ஹோமம் செய்யப்பட்டு, சங்குகளுக்கு சிறப்பு பூஜை செய்து, சிவனுக்கு சங்காபிஷேகம் செய்வது வழக்கமாக உள்ளது.

மதுரை மாவட்டத்தில், மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர், இம்மையில் நன்மை தருவார், திருவேடகம் ஏடகநாதர், சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமான பிரளயநாதர், தென்கரை மூலநாதர், மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர், மேலமடை சௌபாக்யா விநாயகர், திருமங்கலம், மேலூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட பல சிவ ஆலயங்களில் 1008, 108 சங்காபிஷேகம் சிவனுக்கு நடைபெறும்.

பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்தும், அரசு விதிகளை பின்பற்றவும் கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.