கொத்தமல்லி புலாவ்
தேவையான பொருட்கள்
புலாவ் அரிசி – 3 கப்
தேங்காய் – 2
கொத்தமல்லித் தழை – 2 சிறு கட்டுகள்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
ஏலக்காய் – 4
கிராம்பு – 4
மல்லி விதை – ஒரு தேக்கரண்டி
பூண்டு – 10 பற்கள்
வெங்காயம் – 5
இஞ்சி விழுது – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 7
பட்டை – சிறிதளவு
கசகசா – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
முந்திரி – அலங்கரிக்க
செய்முறை
அரை மூடி தேங்காயைத் துருவி, அத்துடன் ஏலக்காய், கிராம்பு, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், பட்டை, மல்லி விதை மற்றும் கசகசா சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
அத்துடன் ஒன்றரை கட்டு கொத்தமல்லித் தழையையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். மீதமிருக்கும் தேங்காயைத் துருவி 3 டம்ளர் அளவு தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
அத்துடன் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு புலாவ் அரிசியை நன்றாக கழுவி, ரைஸ் குக்கரில் போட்டு, அத்துடன் வதக்கியவற்றைச் சேர்த்து 3 டம்ளர் தேங்காய் பால் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்.
சுவையான கொத்தமல்லி புலாவ் தயார். மீதமுள்ள கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கி வறுத்த முந்திரியையும் சேர்த்து அலங்கரிக்கவும்.