
புலஹன்னம்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி / பச்சரிசி – ஒரு கப்
பாசிப்பருப்பு – கால் கப்
தேங்காய் விழுது – 3 தேக்கரண்டி
வெங்காயம் – பாதி
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – தேவைக்கேற்ப
எண்ணெய் + நெய் – ஒரு தேக்கரண்டி
முந்திரி – தேவைக்கேற்ப
மிளகு -அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். அரிசியைக் களைந்து 15 நிமிடங்கள் ஊறவிடவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் நெய், எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அத்துடன் ஊற வைத்த அரிசி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு தேங்காய் விழுது சேர்த்து, தண்ணீர் ஊற்றி பெருங்காயம் சேர்த்து வேக வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
சுவையான புலஹன்னம் தயார். ஆறியவுடன் மேலே நெய் விட்டு பரிமாறவும்.