வருது..வருது… புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா!

madurai meenakshi amman temple - 2026

வருது..வருது… உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரைதிருவிழா_2022

ஏப்ரல் 14, 2022 வியாழக்கிழமை காலை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும்.

மதுரை என்றாலே மீனாட்சியம்மன் கோயில் பிரபலம்.இக்கோயில் சித்திரை திருவிழா உலக அளவில் பிரபலமானது.

கடந்த இரு ஆண்டுகளாக இக்கோயில் சித்திரை திருவிழா என கொரோனாவால் களை இழந்து ‌போனது.இந்த ஆண்டு வழக்கம்போல் கலை கலாசார நிகழ்வுகளுடன் பக்தர்கள் அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள் என்றே கூறுகின்றனர்.

சித்திரை திருவிழா வின் முதல்நிகழ்வாக ஏப்ரல் 05, 2022 அன்று செவ்வாய்கிழமை சித்திரை திருவிழா கொடியேற்றும் நிகழ்வு வேதபாராயண முறைப்படி நடைபெறும். அன்று கற்பக விருக்ஷ‌ சிம்ம வாகனத்தில் சுவாமி அம்மன் வீதியுலா நடைபெறும்.

ஏப்ரல் 06, 2022 புதன்கிழமை பூத , அன்ன வாகனம்
ஏப்ரல் 07, 2022 வியாழக்கிழமை கைலாச பர்வதம், காமதேனு வாகனம்
ஏப்ரல் 08, 2022 வெள்ளிக்கிழமை ‌தங்க பல்லக்கு,ஏப்ரல் 09, 2022 சனிக்கிழமை வேடர் பறி லீலை தங்க குதிரை வாகனத்தில் வீதியுலா நடைபெறும்.

ஏப்ரல் 10, 2022 ஞாயிறுக்கிழமை – சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை – ரிஷப வாகனம்,ஏப்ரல் 11, 2022 திங்கள்கிழமை- நந்தீகேஸ்வரர் , யாளி வாகனம்

ஏப்ரல் 12, 2022– செவ்வாய்கிழமை ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் நடைபெறும்.இரவு சுவாமி அம்மன் வெள்ளி சிம்மாசன உலா நடைபெறும்.அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்‌ வைபோகத்திற்கு அழகர் கோயில் பிரகாரத்தில் புறப்பாடு நடைபெறும். ஏப்ரல் 13, 2022 புதன்கிழமை – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் இந்திர விமான உலா நடைபெறும்.

சித்திரை திருவிழா முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 14, 2022– வியாழக்கிழமை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகோலமாக நடைபெறும்.திருமணம் முடிந்ததும் அறுசுவை விருந்து நடைபெறும்.இரவு யானை வாகனம் புஷ்பபல்லக்கில் சுவாமி அம்மன் வீதியுலா நடைபெறும்.

ஏப்ரல் 15, 2022 வெள்ளிக்கிழமை ‌திரு தேர் தேரோட்டம் கோலாகோலமாக நடைபெறும். இரவு சப்தாவர்ண சப்பரம் உலா நடைபெறும்.

ஏப்ரல் 15, 2022 வெள்ளிக்கிழமை தீர்த்தம்; வெள்ளி விருச்சபை சேவவை
அன்று இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை

kallalagar - 2026

ஏப்ரல் 16, 2022 சனிக்கிழமை ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருறல் 1000 பொன்சம்பரத்துடன் – சைத்யோபசாரம் வண்டியூர் இரவு வருகையும்
ஏப்ரல் 17, 2022 ஞாயிறுக்கிழமை திருமலிருந்தசோலை ஸ்ரீ கள்ளழகர் வண்டியூர் தேனுர் மண்டபம் சேஷ வாகனம் (காலை) கருட வாகனம் , பிற்பகல் – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், (இரவு) தசாவதார காட்சி இடம் : ராமராயர் மண்டபத்தில் நடைபெறும்.ஏப்ரல் 18, 2022 – திங்கள்கிழமை- (காலை) மோகனாவதாரம் – (இரவு) கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு மைசூர் மண்டபத்தில் நடைபெறும்.ஏப்ரல் 19, 2022 செவ்வாய்கிழமை ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருதலுடன் சித்திரை திருவிழா நிறைவடையும்.

  • தகவல்: பரமசிவம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories