மதுரை-புதுமண்டபத்தில் எழுந்தருளிய மீனாட்சி -சுந்தரேஸ்வரர்..

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த விழாவையொட்டி புதுமண்டபத்தில் உலா வந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் எழுந்தருளினர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாதம் தோறும் திருவிழா நடைபெறும். அதில் வைகாசி மாதத்தில் நடைபெறும் வசந்த திருவிழா புதுமண்டபத்தில் நடக்கும். குறிப்பாக இந்த ஆண்டு, புதுமண்டபத்தில் இருந்த அனைத்து கடைகளும் அகற்றப்பட்டு, அகழியில் தண்ணீர் நிரப்பப்பட்டு வெகு விமரிசையாக திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுபோல், புது மண்டபம் வண்ண வண்ண மலர்களாலும், பழங்களாலும், மின்விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, வைகாசி வசந்த திருவிழா நேற்று மாலை தொடங்கியது.

கோவிலில் இருந்து மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் – பிரியாவிடையுடன் பரிவார மூர்த்திகளுடன் புறப்பட்டு அம்மன் சன்னதி, கீழ ஆவணி மூல வீதி வழியாக புதுமண்டபத்திற்குள் எழுந்தருளினர்.அங்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க மண்டபத்தை சுற்றி 3 முறை வலம் வந்து பின்னர் மைய மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர், சாமிக்கு சிறப்பு தீபாராதனைகள், பூஜைகள் நடைபெற்றது. கடைகள் இன்றி… கடந்த காலங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் வசந்த விழாவில் புதுமண்டபத்தில் தண்ணீர் இன்றி, ஏராளமான கடைகளுக்கு இடையே சாமி உலா வரும். இந்த நிலையில் இந்தாண்டு புதுமண்டபத்தில் உள்ள கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு பழங்காலத்தில் நடைபெற்றது போல மண்டபத்தைச் சுற்றி அகழியில் தண்ணீர் நிரப்பப்பட்டு, உலா நடந்து மைய மண்டபத்தில் சாமி-அம்மன் எழுந்தருளினர்.கடைகள் அகற்றப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் புதுமண்டபத்தில் அமர்ந்து சாமியை தரிசிக்க முடிந்தது.

இந்த வைகாசி வசந்த உற்சவமானது வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது. முதலாம் நாள் முதல் 9-ம் திருநாள் வரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் எனும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு தினமும் மாலை 6 மணி அளவில் நடக்கும். அதை தொடர்ந்து கோவிலில் இருந்து சுவாமிகள் புறப்பட்டு புது மண்டபம் சென்று, அங்கு வீதி உலா- தீபாராதனை நடத்தப்படும்.

பின்பு சுவாமிகள், 4 சித்திரை வீதிகளிலும் வலம் வந்து கோவிலை சென்றடைவர். 12-ந்தேதி அன்று காலையிலேயே சுவாமிகள் புது மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். அன்றைய தினம் மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதி உலா நடைபெறும்.

mdu4.jpeg - 2026
mdu.jpeg - 2026
mdu2.jpeg - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories