To Read it in other Indian languages…

Home உள்ளூர் செய்திகள் மதுரை கொரோனாவால் ரத்தான ரயில்கள் ஜூலை 1 முதல் மீண்டும் இயக்கம்..

கொரோனாவால் ரத்தான ரயில்கள் ஜூலை 1 முதல் மீண்டும் இயக்கம்..

மதுரை — செங்கோட்டை, நெல்லை — செங்கோட்டை, நெல்லை — திருச்செந்துார்
பிரிவுகளில் கொரோனா வால் நிறுத்தம் செய்யப்பட்ட பயணிகள் ரயில் ஜூலை 1 முதல்  முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்களாக விரைவு ரயில் கட்டணத்தில் ‌இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை – செங்கோட்டை முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் (06663) மதுரையிலிருந்து காலை 11:30 மணிக்கு புறப்பட்டு மதியம் 3:20 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை — மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06664) காலை 11:50 மணிக்கு புறப்பட்டு மதியம் 3:35 மணிக்கு மதுரை வந்து சேரும்.

இந்த ரயில்கள் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

நெல்லை — செங்கோட்டை- – நெல்லை பகுதிக்கு இரண்டு ஜோடி சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. இதன்படி நெல்லை- செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06681) நெல்லையில் இருந்து காலை 9:10 மணிக்கு புறப்பட்டு காலை 11:25 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். இதே மார்க்கத்தில் மற்றொரு நெல்லை – செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06687) நெல்லையில் இருந்து மதியம் 1:50 மணிக்கு புறப்பட்டு, மாலை 4:15 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் செங்கோட்டை – நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06658) செங்கோட்டையிலிருந்து மதியம் 2:55 மணிக்கு புறப்பட்டு மாலை 5:20 க்கு நெல்லை வந்து சேரும். இதே மார்க்கத்தில் மற்றொரு செங்கோட்டை – நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06684) செங்கோட்டையிலிருந்து காலை 10:05 மணிக்கு புறப்பட்டு பகல் 12:25 மணிக்கு நெல்லை வந்து சேரும்.இந்த ரயில்கள் நெல்லை டவுன், பேட்டை, சேரன்மகாதேவி,
காருக்குறிச்சி, வீரவநல்லுார், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவண சமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருச்செந்துார் — நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06405) திருச்செந்துாரிலிருந்து காலை 10:15 மணிக்கு புறப்பட்டு பகல் 12.00 மணிக்கு நெல்லை வந்து சேரும். மறுமார்க்கத்தில் நெல்லை- – திருச்செந்துார் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06409) நெல்லையில் இருந்து மாலை 4:05 மணிக்கு புறப்பட்டு 5: 45 மணிக்கு திருச்செந்துார் சென்று சேரும். இந்த ரயில்கள் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சினாவிளை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லுார் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

images 8 2 - Dhinasari Tamil

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.