WhatsApp Image 2022 08 31 at 1.jpeg - 2026

மதுரையில் பொதிகை ரயில் இன்ஜின் தடம் புரண்டது..

மதுரை
WhatsApp Image 2022 08 31 at 1.jpeg - 2026

இன்று 31.08.22 காலை மதுரை வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை வரை மின்சார எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.இந்த ரயிலுக்கு மதுரையில் டீசல் இன்ஜின் மாற்றப்படுவது வழக்கம்.அதுபோல இன்று அதிகாலை இஞ்சின் மாற்றம் நடைபெற்றது.

பொதிகை எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து வழக்கமான நேரத்திற்கு புறப்பட்டு சென்றது.இந்த ரயிலில் இருந்து கழற்றப்பட்ட மின்சார இஞ்சின் பின்புறமாக பார்சல் ஆபிஸ் அருகே நிறுத்த சென்றபோது மூன்று சக்கரங்கள் தடம் புரண்டன.

தடம் புரண்ட இஞ்சினை சரி செய்வதற்காக காலை 07.25 மணி முதல் 20 நிமிடத்திற்கு மின் பாதையில் உள்ள மின்சாரம் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டது.

இன்ஜின் தடம் புரண்டதால் திண்டுக்கல் மார்க்கத்தில் செல்ல வேண்டிய ரயில்கள் சிறிது காலதாமதமாக புறப்பட்டன.

மதுரை – செகந்திராபாத் சிறப்பு ரயில் ஒரு மணி நேரமும், வைகை எக்ஸ்பிரஸ் 10 நிமிடமும், பழனி சிறப்பு ரயில் 9 நிமிடமும், தேனி சிறப்பு ரயில் 32 நிமிடங்களும் மதுரையிலிருந்து கால தாமதமாக புறப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.