
111 இரண்டாம் நிலை காவலர்கள் சிறப்பு சார்பு
ஆய்வாளராக பதவி உயர்வு செய்து மதுரை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களாக பணிபுரிந்து வந்த 111 பேரை சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றனர்.
காவல்துறையில் கடந்த 1997 ல் பணியில் சேர்ந்த காவலர்களில் தலைமைக் காவலர்களாக பதவி உயர்வு பெற்று 111 பேர் தற்போது பணியில் உள்ளனர். இவர்கள் அனைவரையும் மதுரை சரக டிஐஜி பொன்னி உத்தரவின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மனோகர் வெளியிட்டுள்ளார்.
அதில், விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த கண்ணன், அன்னபூரணி, காளிமுத்து, சுடலை முத்து, விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த மாரீஸ்வரன் உட்பட பலர் சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.