ராணி வேலுநாச்சியார் 293வது பிறந்த தினம்: அரசு சார்பில் மரியாதை!

sivagangai rani velunatchi birthday celb - 2026

வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 293-வது பிறந்த நாள்
அரசு விழாவினை முன்னிட்டு, அவர்களது திருவுருவச் சிலைக்கு,
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 293-வது பிறந்த நாள் அரசு விழாவினை முன்னிட்டு, சிவகங்கை-சூரக்குளத்தில் அமைந்துள்ள வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவு மண்டபத்தில், அவர்களது திருவுருவச்சிலைக்கு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப சிதம்பரம்,

சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை) எஸ்.மாங்குடி, (காரைக்குடி) மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து, அவ்வளாகத்திலுள்ள வீரத்தாய் குயிலி அவர்களின் நினைவுச்சின்னத்திலும் அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் பேசுகையில்,
இந்திய விடுதலை வரலாற்றில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி வெற்றி கண்டு, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த முதல் பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 293-வது பிறந்த நாள் விழா இன்றையதினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சுதந்திரப் போராட்டத்திற்கு பாடுபட்ட தியாகச்செம்மல்களை என்றென்றும் போற்றி பாதுகாக்கும் வண்ணம், நினைவு மண்டபங்கள் அமைத்து பாதுகாத்து வந்தத் தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆவார்கள். அவ்வழியில் சிறப்பான ஆட்சியினை தமிழகத்தில் நடத்;தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர், சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட தமிழர்களின் அளப்பறியாப் பங்கு குறித்தும், வீரர்களின் தியாகம் குறித்தும், போராட்டங்கள் குறித்தும், தாய்மொழியான தமிழ்மொழி குறித்தும், வீரம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவைகளில் பங்கு பெற்ற முன்னோர்களை கௌரவிக்கும் பொருட்டும், இதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் , பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்தவகையில், இந்தியா வரலாற்றில் முதல் பெண்மணியாக சுதந்திரத்திற்காக தனித்து நின்று போராடிய வீரமங்கை வேலுநாச்சியார், பிறந்த சிவகங்கை மாவட்டத்தில், இவ்வீரப் பெண்மணிக்கு நினைவு மண்டபம் அமைத்து, ஆண்டுதோறும் அவர்களின் பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாடும் வகையில், அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன்படி இன்றையதினம் அவர்களது 293-வது பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும், இந்திய விடுதலைப் போரில் தமிழர்களின் பங்களிப்பினை வெளிக்கொணரவும் தமிழ் சமூகத்தின் கலாச்சாரம் பண்பாட்டினை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 13.08.2022 அன்று வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் வரலாறு கூறும் இசையார்ந்த நாடகத்தினை சென்னை கலைவாணர் அரங்கில் துவக்கி வைத்தார்கள். அந்நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து, 30.08.2022 அன்று சிவகங்கை அரண்மனை வளாகத்தில் இசையார்ந்த நாடக நிகழ்ச்சி நடைபெற்று, அதன்மூலம் வெள்ளையனை வீரப்போர் புரிந்து எதிர்த்து, எதிரிகளை துவம்சம் செய்த காட்சிகளை கண் முன் எடுத்துக்காட்டும் நிகழ்வாக சிறப்பாக நடைபெற்றது.

இதுபோன்று சுதந்திரப் போராட்டத் தியாகிகளை போற்றிடும் வகையில், அவர்களை கௌரவித்தும், இளையதலைமுறையினருக்கு முன்மாதிரியாக திகழும் வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சர், சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், மதிப்பிற்குரிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், சிவகங்கை மாவட்டத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் பெண்கள் காவலர் பயிற்சி கல்லூரி அமைத்துத்தருமாறு அரசிடம் வைத்துள்ள கோரிக்கையின் அடிப்படையில், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு, இடம் தேர்வு செய்தல் போன்ற நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இவ்விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். த.செந்தில்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரைஆனந்த், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து (காஞ்சிரங்கால்) மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories