கள்ளழகர் வேடத்தில் வைகையில் இறங்கிய தேனூர் சுந்தர்ராஜப் பெருமாள்!

thenur sundarraja perumal - 2026
#image_title

மதுரை மாவட்டம் தேனூரில் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளினார்!ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் உள்ள சுந்தரராஜபெருமாள் (கள்ளழகர்)கோவில் வைகாசி பெருந்திருவிழா நடந்தது.இதையொட்டி சுந்தரராஜபெருமாள் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வேடத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு வீதிஉலா வந்தார்.அப்போது வழி நெடுக கள்ளழகரை பக்தர்கள் வரவேற்று பூஜை செய்து செம்பில் சக்கரை தீபம் ஏற்றி வணங்கினார்கள். இதைத்தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

தொடர்ந்து பூஜைகள் நடந்தது வைகை ஆற்றில் உள்ள மண்டகப்படியில் கள்ளழகர் தங்கினார். பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைத் தொடர்ந்து வெளியூர் கிராமப்பெண்கள் திருவிளக்கு பூஜை மற்றும்.இரவு பரதநாட்டிய நிகழ்ச்சி . நடைபெற உள்ளது

நாளைமாலை திருமஞ்சனமாகி, தேனூர் வைகை ஆற்றில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல் நடைபெற உள்ளது.இதைத் தொடர்ந்து உள்ளூர் பெண்கள் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.இரண்டு நாள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு பரம்பரைதர்மகர்த்தா நெடுஞ்செழியபாண்டியன் குடும்பத்தார் சார்பாக அன்னதானம் மற்றும் புத்தாடை வழங்கப்படுகிறது. இரவு ராஜாங்க அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிக்க உள்ளார்.இதையொட்டி பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும்.

நாளை மறுநாள்அதிகாலை வைகைஆற்றில் இருந்து ஸ்ரீதேவிபூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் பல்லக்கில் அலங்காரமாகி வீதி உலா நடைபெறம் பின்னர்,சுவாமி திருக்கோயில் வந்து சேரும். மூன்று நாளும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து பரம்பரை தர்மகர்த்தா நெடுஞ்செழியன் பாண்டியன் கூறியதாவது. பண்டைய புராணங்களில் ஒன்றான மண்டுக புராணத்தில் அழகர் கருணை மிக அழகாகக் கூறப்பட்டுள்ளது. அதில் மண்டுக மகரிஷிக்கு சுந்தரராஜர் என்ற பெயரில் திருமால் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுக்கும் லீலை சுமார் 364 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த தேனூர் கிராமத்தில் தான் பல்லாயிரம் வருடங்களாக நடைபெற்று வந்துள்ளது.

இதனால் தேனூர் சுந்தரராஜ பூமி என்று இன்றும் பேசப்படுகிறது. இப்பெரும் விழாவில் அழகர்கோவிலில் இருந்து ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடாகி தேனூர் வைகையாற்றில் எழுந்தருளி மண்டுக மகரிஷிக்கு மோட்சம் தரும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெற்று வந்தது. திருமலை மன்னர் தேனுருக்கு விஜயம் செய்து இந்தத் திருவிழாவைக் கண்டு மகிழ்ந்து தலைநகர் மதுரையில் மீனாட்சி சொக்கர் திருக்கல்யாண திருவிழாவுடன் இணைந்து நடத்துவதற்கு மதுரைக்கு இத்திருவிழா மாற்றப்பட்டது.

மேற்படி திருவிழாவானது சுமார் 365 ஆண்டுக்குப் பின் 2008 ஆம் ஆண்டு முதல் வைகாசிப் பௌர்ணமியன்று எங்கள் பெறும் முயற்சியாலும் கிராம பொது மக்களின் ஒத்துழைப்போடு தேனூரில் அதிகவிமர்சையாகநடைபெற்று வருகிறது. இந்தாண்டு மேற்படி திருவிழா 15ம் ஆண்டு திருவிழாவாக வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories