காரியாபட்டி அருகே, கணக்கணேந்தலில் உள்ள புத்துக் கோவிலில் நாகபஞ்சமி திருவிழா நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் , காரியாபட்டி கணக்கனேந்தல் புத்துக்கோவிலில் நாக பஞ்சமி சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில், நாகம்மாள் சிலைக்கு பால், தயிர், திருமஞ்சனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைப்பெற்றது.
பின்னர், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட உற்சவர் சிலையான நாகம்மாள், லிங்கம் போன்ற சிலைகளுக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது.
மேலும், நாகபஞ்சமி திருவிழாவை முன்னிட்டு ,
கால சர்ப தோஷம், நாகதோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியம், தொழில் பிரச்சனை மற்றும் விவசாயம் செழிக்கவும், நல்ல மழை பெய்ய வேண்டியும் சுமார் 300-க்கும் மேற்பட்ட திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நாகபஞ்சமி திருவிழா சிறப்பு பூஜையில், விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை போன்ற பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.