உலகப்புகழ் பாலமேடு ஜல்லிக்கட்டு இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணி தீவிரம்!
உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 15ஆம் தேதி புதன்கிழமை அங்குள்ள மஞ்சமலை ஆற்று திடல் வாடிவாசலில் அரசு வழிகாட்டுதல்படி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது பாலமேடு பேரூராட்சி சார்பில் வாடிவாசல் வண்ணம் பூசும் பணிகள், பார்வையாளர் அமரும் கேலரி அமைப்பது, இரண்டடுக்கு பாதுகாப்பு வேலி, உள்ளிட்ட பல்வேறு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பாலமேடு பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியராஜன், துணைத் தலைவர் ராமராஜ், மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு விழாவிற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், தற்காலிக கழிப்பறை வசதிகள், ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் ஆங்காங்கே நின்று கண்டு ரசிக்க பேருந்து நிலையம், விளக்குதூண் உள்ளிட்ட இடங்களில் அகன்ற திரை மூலம் நேரடி ஒளிபரப்பு வசதி, இடங்களில் தற்காலிக குடிநீர் வசதிகள், தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வாகங்கள், உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது..